முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சடலத்துடன் உடலுறவு வைத்துக் கொள்வது குற்றமாகாது..!! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

The court has issued a sensational ruling, stating that sex with a corpse is not a crime of violence.
07:28 AM Dec 23, 2024 IST | Chella
Advertisement

சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்து மாவட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு 9 வயது தலித் சிறுமியைக் காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் சிறுமியின் உடல் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement

அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, சிறுமி கொல்லப்பட்ட பின்னரும் சடலத்துடன் உடலுறவு செய்திருப்பது அதிர்ச்சியளித்துள்ளது. இதுதொடர்பான வழக்கில் நீல்காந்த், நீல்சந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், நீல்காந்த் போக்சோ வழக்கில் இருந்து விடுவிக்க கோரி நீதிமன்றத்தை அணுகினார். அப்போது அவருக்கு போக்சோ குற்றத்தில் இருந்து நீதிமன்றம் விடுவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுமியின் பெற்றோர் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு மீதான விசாரணையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இது போக்சோ அல்லது கற்பழிப்பு குற்றத்தின் கீழ் வராது. சடலத்துடன் செக்ஸ் வைத்துக் கொள்வது நெக்ரோபிலியா என்று குறிப்பிடப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை குற்றம் என்றால் அதனால் பாதிக்கப்பட்டவர் உயிருடன் இருந்திருக்க வேண்டும். வன்கொடுமைக்குப் பிறகு கொலை செய்வது என்பது தனி வழக்கு என்று நீதிபதி தெரிவித்தார். மேலும், சடலத்துடன் செக்ஸ் என்பது வன்கொடுமை குற்றமாகாது என்று கூறி பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Read More : மாஸ்…! இன்று காலை 10.30 மணிக்கு 71,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பணி ஆணை வழங்கும் மோடி…!

Tags :
உடலுறவுகாவல்துறைகொலை வழக்குசத்தீஸ்கர் மாநிலம்சிறுமிநீதிமன்றம்பாலியல் பலாத்காரம்வன்கொடுமை வழக்கு
Advertisement
Next Article