குழந்தைகள் முன் உடலுறவு கொள்வதும், உடை மாற்றுவதும் பாலியல் துன்புறுத்தல்தான்!. நீதிமன்றம் அதிரடி!
Court: குழந்தையின் முன்னிலையில் ஆடையின்றி வருவதும் அல்லது உடலுறவு கொள்வதும் பாலியல் துன்புறுத்தலாகும் என்று கேரளா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 8, 2021 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் 42 வயதான பிசல் கான் என்பவர், 16வயது சிறுவனின் தாயுடன் உடலுறவில் ஈடுபட்டதாக மீது குற்றம் சாட்டப்பட்டது. அதாவது, சிறுவனை பொருட்களை வாங்க அனுப்பிவிட்டு, இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிறுவன் திடீரென திரும்பி வந்துள்ளார். அப்போது அறையின் கதவை மூடாமல் இருவரும் உடலுறவில் ஈடுபட்டதை கண்டு சிறுவன் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அந்த சிறுவனை பிசல் கான் அடித்து உடல்ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், அந்த நபர் சிறுவனை அடிக்கும்போது, தாய் தடுக்க கூட முயற்சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த நபர் மீது இந்திய தண்டனையின் பிரிவுகள் 294(பி) (பொது இடத்தில் ஆபாசமான வார்த்தைகள் அல்லது பாடல்களை உச்சரித்தல்) 323 (தன்னிச்சையாக காயப்படுத்தியதற்காக தண்டனை), ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஏ. பதருதீன் தலைமையிலான அமர்வு, "ஒரு நபர் ஒரு குழந்தைக்கு நிர்வாண உடலைக் காட்டினால், அது ஒரு குழந்தையின் மீது பாலியல் துன்புறுத்தலை நோக்கமாகக் கொண்ட செயலாகும்" என்று குறிப்பிட்டார்.
மேலும் தான் எந்த குற்றமும் செய்யப்படவில்லை என்றும் வழக்கை ரத்து செய்யவேண்டும் என்றும் குற்றம்சாட்டப்பட்ட நபர் வாதிட்டார். இருப்பினும், மனுதாரர்களின் வழக்கை ரத்து செய்ய மறுத்து, விசாரணைக்கு செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Readmore: பருவமழையால் தமிழகம் தவிப்பது ஏன்?. இவ்வளவு மழை பெய்வதற்கு என்ன காரணம்?