For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

10-க்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் உல்லாசம்..!! வீடியோ, புகைப்படங்களை காட்டி பலாத்காரம்..!! கர்ப்பமானதால் அதிர்ச்சி..!!

Police have arrested a young man who flirted with more than 10 young women, promising to marry them, raped them repeatedly, threatened them with photos and videos, and stole their jewelry and money.
05:03 PM Dec 23, 2024 IST | Chella
10 க்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் உல்லாசம்     வீடியோ  புகைப்படங்களை காட்டி பலாத்காரம்     கர்ப்பமானதால் அதிர்ச்சி
Advertisement

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 10-க்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்ததுடன், புகைப்படங்கள், வீடியோக்களை கட்டி மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்ததுடன் நகை, பணத்தை பறித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருவாவடுதுறை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அப்துல்அஜீஸ் மகன் ஜாகிர் ஹூசைன் (23). இவருக்கு மயிலாடுதுறையை சேர்ந்த 29 வயதான பிஇ பட்டதாரி இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த இளம்பெண் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

ஜாகிர் ஹூசைன் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அவரிடமிருந்து 14 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கத்தை பறித்துள்ளார். பின்னர், அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அதை தனது செல்போனில் வீடியோ, புகைப்படம் எடுத்து வைத்துள்ளார். இதைக் காட்டி அந்த இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில், அவர் கர்ப்பமடைந்துள்ளார்.

இதை தெரிந்த ஜாஹூர் உசேன் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த இளம்பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து கட்டாய கருக்கலைப்பு செய்துள்ளனர். இதில், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண், மயிலாடுதுறை போலீசில் புகாரளித்தார். ஆனால், புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இளம்பெண்ணின் மீதே குற்றம்சாட்டி பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, இளம்பெண்ணுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் டிஎஸ்பி பாலாஜி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, ஆசைவார்த்தை கூறி ஏமாற்றுவது, பாலியல் துன்புறுத்துதல், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜாகிர் ஹூசைனை கைது செய்து, மயிலாடுதுறை நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

இதேபோல் ஜாகிர் ஹூசைனால் பாதிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த மற்றொரு இளம்பெண், செல்போன் மூலம் மயிலாடுதுறை போலீசில், தனக்கு நடந்த கொடுமைகள் பற்றி பேசி அந்த வீடியோவை போலீசுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதேபோல் ஜாகிர் ஹூசைனால் 10-க்கும் அதிகமான பெண்கள் புகாரளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜாகீர் ஹூசைன் திருமணமான இளம்பெண்களையும் வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்துவிட்டு, அந்த ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி பணம், நகைகளை பறித்து வந்ததாக கூறப்படுகிறது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Read More : ”தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை அமைப்பேன்”..!! ”நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இதற்காகத்தான்”..!! சசிகலா பரபரப்பு பேட்டி..!!

Tags :
Advertisement