என்னது, தலையில் பூ வைத்தால், உடலில் உள்ள நோய் குணமாகுமா?? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக நமது முன்னோர் செய்த ஒவ்வொரு காரியமும், கட்டாயம் ஏதாவது ஒரு உடல் ஆரோக்கியத்தை சம்மந்தப்படுத்தி இருக்கும். பலர் அதை மூட நம்பிக்கை என்று சொன்னாலும், கட்டாயம் அதற்க்கு பின் ஒரு அறிவியல் காரணம் இருக்கும். அந்த வகையில், நமது முன்னோர் பின் பற்றிய ஒரு வழக்கம் தான் தலையில் பூ வைப்பது. ஆம், நமது முன்னோர் மல்லிகை மற்றும் ரோஜா பூவை மட்டும் இல்லாமல், பல வகையான பூக்களை தலையில் வைப்பது உண்டு. அப்படி அவர்கள் வைக்கும் ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு மருத்துவ குணங்களை கொண்டது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம், ரோஜாப்பூ, தலைச்சுற்றல், கண் நோயை குணப்படுத்தும். மல்லிகைப்பூ, மன அமைதியை அளித்து, கண்களுக்குக் குளிர்ச்சி தரும். செண்பகப்பூ, வாதத்தைக் குணப்படுத்துவதோடு, பார்வைத் திறனை மேம்படுத்தும். செம்பருத்திப் பூ – தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்து, உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். மகிழம்பூ, தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளை குணமாக்கி, பல் வலி, பல் சொத்தை போன்ற பிரச்சனைகளை சரி செய்யும். வில்வப்பூ, சுவாசத்தைச் சீராக்கி, காச நோயைக் குணப்படுத்தும். சித்தகத்திப்பூ, தலை வலியைக் குறைத்து, மூளை சுறுசுறுப்பாக இருக்க உதவும்.
நல்ல நறுமணம் தரும் தாழம்பூ, உடல் சோர்வை நீக்கி, சீரான தூக்கத்துக்கு உதவும். தாமரைப்பூ, தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரி செய்வது மட்டும் அல்லாமல், மன உளைச்சலை நீக்கி மன அமைதி தரும். கனகாம்பரம்பூ, தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரி செய்யும். இதனால் நீங்களும் பூ வைப்பது மாடர்ன் ஆக இல்லை என்று கூறாமல் பூ வைத்து மருத்துவ பயன்களை பெற்று கொள்ளுங்கள்.
Read more: பெண்களே உஷார்.. பால் குடிப்பதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்..!! – ஆய்வில் தகவல்