For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’இதுவரை ஒரு சொட்டு சாராயம் கூட குடிச்சது இல்லையாம்’..!! அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்த கண்ணுக்குட்டி..!!

According to the police, more than 70 cases are pending against Kannukkutty for selling liquor alone.
06:43 PM Jun 22, 2024 IST | Chella
’இதுவரை ஒரு சொட்டு சாராயம் கூட குடிச்சது இல்லையாம்’     அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்த கண்ணுக்குட்டி
Advertisement

கள்ளக்குறிச்சி நகரத்துக்கு அருகில் இருக்கக்கூடிய கருணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தான் கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ். கருணாபுரம் பகுதியில் இவர், பல ஆண்டுகளாவே கள்ளச்சாரய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருடைய வீடு இருக்கக்கூடிய பகுதியை சாராயக்கடை என்றுதான் அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். 50 முதல் 60 ரூபாய் வரை விற்கக் கூடிய இந்த கள்ளச்சாராயம் பாக்கெட்டுகளை முதலில் கருணாபுரம் ஆற்றங்கரையோரம் மறைவாக விற்பனை செய்து வந்துள்ளார்.

Advertisement

பின்னர், கருணாபுரம் பகுதியில் தன்னுடைய வீட்டு அருகே சிறிய கொட்டகை அமைத்து விற்பனையைத் தொடங்கியிருக்கிறார். நாளடைவில் விற்பனை அதிகரிக்க மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடோனாக பயன்படுத்தி வந்துள்ளார். டாஸ்மாக் 10 மணிக்கே மூடிவிடும் நிலையில், இங்கு மட்டும் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் கிடைக்குமாம். கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள சுடுகாட்டோரமாகத் தான் இந்த கள்ளச்சாராய விற்பனை நடந்து வந்துள்ளது. காவல்துறைக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கடந்த ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு சில மாதங்கள் விற்பனையை நிறுத்தி வைத்திருந்தாராம் கண்ணுக்குட்டி. பின்னர் காவல்துறையை சரி செய்து சாராயத்தை அவருடைய சகோதரர் தாமோதரன் மற்றும் மனைவி விஜயா உடன் சேர்ந்து விற்பனை செய்து வந்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள கண்ணு குட்டி 25 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது தன்னுடைய தம்பி தாமோதரன் மூலம் போலீசார் நடமாட்டத்தை வெளியில் இருந்து நோட்டமிட்டு விற்பனை செய்து வந்துள்ளார்.

கள்ளச்சாராயம் விற்பனைக்கு மட்டும் கண்ணுக்குட்டி மீது 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையே, கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருந்த கண்ணுக்குட்டி இதுவரை ஒரு சொட்டு கள்ளச்சாராயம் கூட குடித்தது இல்லையாம். இதை அவரே வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனால் கள்ளச்சாராயத்தை தனது தம்பி தாமோதரனிடம் கொடுத்து குடித்து பார்க்க சொல்வாராம். கள்ளச்சாராய வியாபாரிகள் மீது ஆரம்பத்திலேயே கடும் நடவடிக்கை எடுத்து முறையாக கண்காணித்து வந்திருந்தால், இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்த்திருக்க முடியும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Read More : கொட்டிக் கிடக்கும் வேலை..!! லட்சத்தில் சம்பளம்..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!! சூப்பர் வாய்ப்பு..!!

Tags :
Advertisement