டின்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியிருக்கீங்களா..? கட் ஆஃப் மார்க் எவ்வளவு தெரியுமா..?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கான கட் ஆப் இந்த முறை குறைக்கப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன.
ஆண்டுதோறும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில், கடந்த ஜூன் 9ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 6,624 காலியிடங்களை நிரப்பவே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வை 20 லட்சம் பேர் வரை எழுதினர். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளார்க்- 3 உள்ளிட்ட பல பணிகளுக்கான தேர்வு நடந்தது. நேர்முகத் தேர்வு எதுவும் இல்லை. அதாவது இந்த எழுத்து தேர்வில் உரிய கட் ஆப் மார்க் பெறுவோர் ஆவண சரிபார்ப்பிற்குப் பிறகு பணியிடங்கள் ஒதுக்கப்படும். டிஎன்பிஎஸ்சி இதுவரை கட் ஆப் மார்க்குகளை அறிவிக்கவில்லை. அதேநேரம் இந்தாண்டு கட் ஆப் மார்க் என்னவாக இருக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பொதுப் பிரிவினரில் ஆண் தேர்வாளர்களுக்கான கட் ஆப் மார்க் 146-151 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பொதுப் பிரிவில் பெண் தேர்வாளர்களுக்கான கட் ஆப் மார்க் 152 - 155ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதர பிற்படுத்தப் பிரிவினரில் (ஓபிசி) ஆண்களுக்கு 143-147, பெண்களுக்கு 146-150, பிற்படுத்தப்பட்ட பிரிவு முஸ்லீம் (பிசிஎம்) ஆண்களுக்கு 142 -145 பெண்களுக்கு 139-146 கட் ஆப் மார்க் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
Read More : கிணறு வெட்டும் பணி..!! 3 தொழிலாளர்கள் பரிதாப பலி..!! உறவினர்கள் சந்தேகம்..!!