நீங்க தினமும் போற சாலையில் இதை கவனிச்சிருக்கீங்களா..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!
நாம் அனைவரும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல அதிகமாக சாலைகளையே பயன்படுத்துகிறோம். ஆனால், சாலை விபத்துகள் அதிகம் ஏற்படும் நாடுகளில் நமது இந்தியாவும் ஒன்று. விபத்துகளை தடுக்கவும், சாலைகளில் எப்படி செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தவும் பல விதமான கோடுகள் சாலைகளில் பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்கும்.
உதாரணமாக மஞ்சள், வெள்ளை என்ற நிறங்களிலும், இடைவெளி விட்டும், இடைவெளி இல்லாமலும் கோடுகள் இருக்கும். ஆனால் அவை எதை குறிக்கிறது ஒரு சிலருக்கும் தெரிந்திருக்கும். பெரும்பாலானோருக்கு தெரிய வாய்ப்பில்லை. சாலைகளில் உள்ள கோடுகள் எதனை குறிக்கின்றது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இடைவெளி இல்லாத மஞ்சள் கோடுகள் (Solid yellow lanes): பெரும்பாலும் இட/வல சாலைப் பிரிவுகளை (லேன்) குறிக்கும். இந்த கோடுகளை கடக்க (லேன் மாற) கூடாது.
இடைவெளி உள்ள மஞ்சள் கோடுகள் (Broken yellow lanes): இட/வல சாலைப்பிரிவுகளை குறிக்கும். பெரும்பாலும் இரண்டே லேன்கள் உள்ள சாலைகளில் இருக்கும். அடுத்த லேனில், வாகனம் இல்லை எனில், வரவில்லை எனில், நீங்கள் முன்னால் செல்லும் வாகனத்தை முந்த அடுத்த லேனிற்கு மாறி செல்லலாம். முந்திய பின், நீங்கள் பாதுக்காப்பாக உங்கள் லேனிற்கு வந்து விட வேண்டும்.
இடைவெளி உள்ள வெள்ளைக்கோடுகள் (Broken white lines): பெரும்பாலும் ஒரே சாலைப்பிரிவில் (லேன்) இருக்கும். இக்கோடுகள் இருக்கும் இடத்தில் ஒரு லேனில் இருந்து இன்னொரு லேன் மாறலாம்.
இடைவெளி இல்லாத வெள்ளைக்கோடுகள் (Solid white lines): நீங்கள் இதை கடந்து முன்னால் செல்லும் வாகனத்தை முந்தக்கூடாது. சாலைகளின் ஓரத்தில் இடைவெளி இல்லாமல் வெள்ளை நிறக் கோடுகள் இருக்கும். அவை சாலைகளின் விளிம்பு பக்கத்தில் இருக்கிறது, அதனை தாண்டி செல்ல வேண்டாம் என்பதை குறிக்கும். இந்த கோடுகள் வாகனம் ஓட்டும் போது சாலைகளின் தன்மையைப் பொறுத்து போடப்பட்டிருக்கும். சாலைகளின் திருப்பங்களில், நமக்கு எதிரில் வரும் வாகனங்களை பார்க்க முடியாத காரணத்தால், அங்கு இடைவெளி இல்லாத கோடுகள் போடப்பட்டிருக்கும்.
Read More : டிஎன்பிஎஸ்சி 2025ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு..!! குரூப் 1, குரூப் 2 தேர்வுகள் எப்போது..?