முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இதை கவனிச்சிருக்கீங்களா..? பகலை விட இரவில் தான் ரயில் வேகமாக செல்லும்..!! ஏன் தெரியுமா..?

05:39 PM Jan 31, 2024 IST | 1newsnationuser6
Advertisement

நம் நாட்டின் மிகப்பெரிய பொதுப் போக்குவரத்தில் ரயில்வே துறையும் ஒன்று. ஒவ்வொரு நாளும் குறைந்தது இலட்சக்கணக்கான மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இந்திய ரயில்வேயைப் பயன்படுத்தி வருகின்றனர். பகல் இரவு வித்தியாசம் இல்லாமல் ரயிலில் பயணம் செய்கின்றனர். ஆனால், ஆச்சரியமான ஒன்றை கவனித்தீர்களா? பகல் நேரத்தை விட, இரவு நேர ரயில் வேகமாக செல்லும். அது ஏன் தெரியுமா?

Advertisement

இதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இரவில் ரயிலின் வேகம் ஏன் அதிகரிக்கிறது? அதற்கான காரணங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்... பகலில் அனைத்து ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தண்டவாளத்தை கடந்து மறுபக்கம் செல்கின்றனர். சுரங்கப்பாதையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் ரயில் தண்டவாளங்களை கடந்து பிளாட்பாரங்களை மாற்றுவது மிகவும் ஆபத்தானது. அதுமட்டுமின்றி விலங்குகளும் பகலில் ரயில் தண்டவாளத்தை கடக்கின்றன. எனவே, ரயில் வேகமாக இயங்கினால், ஆபத்து அதிகம்.

ஆனால் இரவில் அந்த பிரச்சனை இல்லை. மனிதர்கள் மற்றும் விலங்குகளின் இயக்கம் இரவு நேரத்தில் குறைவாக இருப்பதால், ஓட்டுநர்களுக்கு ரயிலை இயக்க எளிமையாக இருக்கிறது. நீங்கள் பகலில் ரயிலில் பயணம் செய்திருந்தால், தண்டவாளத்தில் நடக்கும் பராமரிப்புப் பணிகளால் சில நேரங்களில் ரயில்கள் திடீரென நின்றுவிடுவதை கவனித்திருக்க வேண்டும். ஆனால், இரவில் அப்படி ஒரு பிரச்சனை இல்லை. ஏனெனில் இரவில் ரயில் பாதை பணிகள் நடைபெறாது. இதனால் ரயில்களின் வேகம் அதிகமாக இருக்கும்.

Tags :
இந்திய ரயில்வேஇரவு - பகல்ஓட்டுநர்கள்சுரங்கப்பாதைரயில் போக்குவரத்துரயில்வே தண்டவாளம்விலங்குகள்
Advertisement
Next Article