ராமர் அணிந்திருக்கும் ஆபரணங்களை கவனிச்சீங்களா..? அடடே இதற்கு இவ்வளவு சிறப்பா..?
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், பால ராமர் சிலைக்கு அணிவிக்கப்பட்டுள்ள ஆபரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று பால ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது. ராமர் சிலையை பிரதிஷ்டை செய்த பிரதமர் மோடி, 'இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம்' என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, தினந்தோறும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் ராமர் கோயிலுக்கு வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ராமர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட ஆபரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆபரணங்கள் அனைத்தும் அத்யாத்மா ராமாயணம், வால்மீகி ராமாயணம், ராமசரிதமானஸ் மற்றும் ஆளவந்தார் ஸ்தோத்திரம் போன்ற நூல்களை ஆய்வு செய்து அதில் உள்ள குறிப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கூர் ஆனந்தின் லக்னோவைச் சேர்ந்த ஹர்சஹைமல் ஷியாம்லால் ஜூவல்லர்ஸ் மூலம் இந்த ஆபரணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல ராமர் சிலைக்கு அணிவிக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற வேட்டி மற்றும் சிவப்பு நிற அங்கவஸ்திரம் பனாரஸ் பட்டால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், தூய தங்க 'ஜாரி' பயன்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த டெக்ஸ்டைல் டிசைனர் மணீஷ் திரிபாதி என்பவரால் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது.