மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 உங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லையா..? உதயநிதி ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்..!!
தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது பேசிய அவர், திராவிட முன்னேற்ற கழகத்தின் குடும்ப விழாவாக இந்த திருமண விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 'மோடி எங்கள் டாடி' என்று சொல்லக்கூடியவர்களை வீட்டுக்கு அனுப்பியவர்கள் இங்கு அமைச்சர்களாக உட்கார்ந்திருக்கிறார்கள்.
இந்தியாவில் முதன்முறையாக மகளிருக்கு குடும்ப சொத்தில் சம உரிமை என்று கொண்டு வந்தவர் கலைஞர். இந்தியாவில் முதல்முறையாக, முதலமைச்சர் ஸ்டாலின் காலை உணவு திட்டம் தொடங்கி 20 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.
முதல்வர் ஸ்டாலின் மகளிருக்கு கடந்த செப்டம்பர் மாதம் முதல் இன்று வரை மாதம் ரூ.1,000 வழங்கிக் கொண்டிருக்கின்றார். அதில் சில குறைபாடுகள் இருக்கிறது. விரைவில் அது சரி செய்யப்பட்டு அனைத்து தகுதி உள்ள மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 கொடுக்கப்பட இருக்கிறது” eன்றார்.