For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உங்க பான் கார்டு காணாமல் போய்விட்டதா?… உடனே கிடைக்க இதை செய்யுங்க!

06:20 AM Dec 18, 2023 IST | 1newsnationuser3
உங்க பான் கார்டு காணாமல் போய்விட்டதா … உடனே கிடைக்க இதை செய்யுங்க
Advertisement

பான் கார்டு தொலைந்துவிட்டதா? ஆன்லைன் மூலமாக சில நிமிடங்களில் இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

Advertisement

ஆதார் கார்டைப் போலவே பான் கார்டும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்த பான் கார்டு வருமான வரித் துறையால் வழங்கப்படுகிறது. வரிவிதிப்பு மற்றும் பிற பணப் பரிவர்த்தனை சார்ந்த நோக்கங்களுக்காக இந்த பான் கார்டு வழங்கப்படுகிகிறது. பான் கார்டு இல்லாமல் பரிவர்த்தனை செயல்முறை அல்லது வங்கி சார்ந்த வேலைகளை முடிக்க முடியாது. கடன் வாங்குவதற்கு பான் கார்டு அவசியம்.

அப்படிப்பட்ட மிக முக்கியமான ஆவணமாக உள்ள உங்களுடைய பான் கார்டு தொலைந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? பான் கார்டு தொலைந்துவிட்டால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. புதிய பான் கார்டை உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பித்து வாங்க நீண்ட காலம் எடுக்கும். சரிபார்ப்பு, அச்சிடுதல் மற்றும் அஞ்சல் மூலம் அனுப்புதல் போன்ற செயல்முறைகளுக்குப் பிறகு புதிய பான் கார்டு உங்களை வந்து சேரும்.

ஆனால், உடனடியாக உங்களுடைய பான் கார்டை உருவாக்க வேண்டும் என்றால், வருமான வரித் துறை உங்களுக்கு இ-பான் கார்டு வசதியை வழங்குகிறது. இ-பான் கார்டை எவ்வாறு பெறுவது என்று இங்கே பார்க்கலாம். NSDL வெப்சைட்டில் சென்று பான் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். பான் கார்டு பெற, சில முக்கிய ஆவணங்கள் தேவை. புதிய பான் கார்டு தயாரிக்க எந்தெந்த ஆவணங்கள் தேவை என்பதையும் இங்கே பார்க்கலாம்.

பான் கார்டு வாங்குவதற்கு ஆதார் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களைப் பயன்படுத்தலாம். பாஸ்போர்ட் சைஸ் புகைப்படமும் தேவைப்படும். இ-பான் கார்டு சேவையின் கீழ் வருமான வரித்துறையால் உடனடி பான் கார்டு வழங்கப்படுகிறது. ஆதார் எண் உள்ளவர்கள் இந்த செயல்முறையை பின்பற்றலாம்.

முதலில் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற முகவரிக்குச் சென்று ’Instant e-PAN’ என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அடுத்து ’Get New e-PAN’ என்ற வசதியை கிளிக் செய்து உங்களுடைய 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும். அதன் பின்னர் ’Continue’ கொடுத்தவுடன் ’I have read the consent terms’ என்பதை கிளிக் செய்து மீண்டும் ’Continue’ கொடுக்க வேண்டும். உங்களுடைய மொபைல் நம்பருக்கு வரும் OTP நம்பரை பதிவிட்டு மற்ற செயல்முறைகளையும் முடித்துவிட்டால் உங்களுடைய இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Tags :
Advertisement