முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டதா..? ஆன்லைனில் மீண்டும் பெறுவது எப்படி..? வாகன ஓட்டிகளே தெரிஞ்சிக்கோங்க..!!

If you have lost your driving license, you can get a copy online.
05:40 AM Oct 08, 2024 IST | Chella
Advertisement

இந்தியாவில் மோட்டார் வாகனங்களை ஓட்ட டிரைவிங் லைசென்ஸ் கட்டாயம் தேவை. இந்த டிரைவிங் லைசென்ஸ் உரிமம் என்பது, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஆர்டிஓ (Regional Transport Office) அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது. ஒரு நபர் வாகனம் ஓட்ட விரும்பினால், முதலில் கற்றல் நோக்கத்திற்காக அவருக்கு கற்றல் உரிமம் தரப்படும். இது வெறும் 6 மாத காலமே உள்ள தற்காலிக உரிமமாகும். அதற்கு பிறகுதான், நிரந்தர உரிமம் தரப்படும். அந்தவகையில், பல்வேறு வகையான பயன்பாடுகளுக்கு ஏற்ப, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படுகிறது.

Advertisement

ஒருவேளை உங்கள் டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டால், அதன் நகலை ஆன்லைனிலேயே நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு முன்னதாக, டிரைவிங் லைசென்ஸ் தொலைந்துவிட்டாலே, முதலில் போலீஸ் ஸ்டேஷனில் FIR பதிவு செய்ய வேண்டும். அதேபோல, டிரைவிங் லைசென்ஸ் கிழிந்துவிட்டாலும், அதனையும் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். மீண்டும் இதனை பெறுவதற்கு எப்ஐஆர் பெறத்தேவையில்லை.

ஆன்லைன் விண்ணப்பம் : போலி உரிமம் பெற www.eservices.tnpolice.gov.in
என்ற தொலைந்துபோன ஆவண அறிக்கை (Lost Document Report) என்ற பிரிவில் சென்று பதிவு செய்து, தாங்களே பிரிண்ட் எடுத்துக் கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதனால் வீண் அலைச்சலைத் தடுக்க முடியும். இடைத்தரகர்கள் பணம் பெறுவதையும் தடுக்க முடியும். வாகனப் பதிவு சான்று தொலைந்து போனாலும் இதே முறையை பின்பற்றி வாங்கிக் கொள்ளலாம்.

* போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

* அங்கு கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பி, LLD படிவத்தையும் நிரப்ப வேண்டும்.

* பின்னர், அனைத்தையும் பிரிண்ட் எடுத்து, அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

* இந்த படிவம் ஆவணங்கள் இவைகளை ஆர்டிஓ அலுவலகத்தில் அல்லது ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

* அடுத்த 30 நாட்களுக்கு பிறகு, டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் உங்களுக்கு கிடைத்துவிடும்.

என்ன செய்ய வேண்டும்? ஆன்லைனில் விண்ணப்பித்ததுமே, கிடைக்கும் ரசீதினை பத்திரப்படுத்தி வைத்து கொள்ள வேண்டும். ஒருவேளை, போலி லைசென்ஸ் கிடைப்பதில் தாமதமானால், இந்த ரசீதை கொண்டு ஆர்டிஓ அலுவலகத்தில் கேட்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதால், அலைச்சல் தவிர்க்கப்படும். அதேசமயம், இடைத்தரகர்கள் யாரையுமே நம்பியிருக்க தேவையில்லை.

ஆஃப்லைனிலும் இந்த நகலுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு, ஆர்டிஓ அலுவலகத்துக்கு சென்று, LLD படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவத்துடன், துறை நிர்ணயித்த கட்டணத்தையும் சேர்த்து செலுத்தினால், அடுத்த 30 நாட்களில் போலி ஓட்டுநர் உரிமம் கிடைத்துவிடும்.

Read More : தமிழக ரேஷன் கடையில் காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Tags :
டிரைவிங் லைசென்ஸ்மோட்டார் வாகன சட்டம்வட்டார போக்குவரத்து அலுவலகம்
Advertisement
Next Article