For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைத்துவிட்டீர்களா? இன்றுதான் கடைசி நாள்!!

05:20 AM May 31, 2024 IST | Baskar
பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைத்துவிட்டீர்களா  இன்றுதான் கடைசி நாள்
Advertisement

பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு இன்றுதான் கடைசி நாள் ஆகும்.

Advertisement

வருமானவரித்துறை இந்தியாவில் வரி செலுத்துவோருக்கு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரி கழிவுத்தொகைகள் அதிக விகிதத்தில் குறைக்கப்படுவதை தவிர்ப்பதற்கு வரி செலுத்துவோர் அனைவரும் இன்று மே 31, 2024-க்குள் தங்களுடைய ஆதார் எண்ணை PAN உடன் இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்திருந்தது.

வருமான வரி விதிகளின்படி, ஒரு பர்மனென்ட் அக்கவுண்ட் நம்பர் (PAN) பயோமெட்ரிக் ஆதாருடன் இணைக்கப்படாவிடில், வழக்கத்தை விட இரண்டு மடங்காக TDS தொகை கழிக்கப்படும். மே 31ஆம் தேதிக்குள் வரி செலுத்துவோர் தங்களுடைய ஆதாரை PAN கார்டுடன் இணைத்து விட்டால் சிறிய அளவு TDS தொகைக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதை கடந்த மாதம் ஒரு சுற்றறிக்கை மூலமாக வருமானவரித்துறை தெரிவித்திருந்தது. இதற்கு முன்னால் X தள பக்கத்தில் அதிக வரி கழிவுத் தொகைகளை தவிர்ப்பதற்கான கடைசி தேதி சம்பந்தமாக வருமான வரித்துறை பதிவு ஒன்றை வெளியிட்டியிருந்தது.

அதில் “வரி செலுத்துவோருக்கு ஒரு அன்பான வேண்டுகோள், வருகிற மே 31, 2024-க்குள் உங்களுடைய PAN கார்டை ஆதார் எண்ணுடன் இணைத்து விடுங்கள்… மே 31ஆம் தேதிக்குள் உங்களுடைய PAN கார்டை ஆதார் எண்ணுடன் இணைத்து விட்டால் வருமான வரி சட்டம் 1961 -இன் கீழ் உள்ள பிரிவு 206AA மற்றும் 206CC -இன் படி வசூலிக்கப்படும் அதிக வரி கழிவுத்தொகை அல்லது வரி சேகரிப்பு குறித்து நீங்கள் கவலைப்பட தேவையில்லை,” என்று வருமான வரித்துறை கூறியிருந்தது. மற்றுமொரு பதிவில் வங்கிகள் மற்றும் ஃபோரெக்ஸ் டீலர்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் அபராதங்களை தவிர்க்க மே 31ஆம் தேதிக்குள் SFT தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது. மேலும் SFT ரிட்டன்களை தாக்கல் செய்ய தவறும் ஒவ்வொரு நாளும் 1000 ரூபாய் அபராத தொகையை செலுத்த வேண்டும். SFT மூலமாக வருமான வரித்துறை ஒரு தனிநபர் பெயரில் நடந்துள்ள அதிக மதிப்பு கொண்ட பண பரிமாற்றங்களை கண்காணிக்கிறது.

Read More: 3-வது முறையாக கர்ப்பமான சிவகார்த்திகேயன் மனைவி..!! வைரலாகும் வீடியோ..!! ரசிகர்கள் வாழ்த்து..!!

Tags :
Advertisement