பல வருஷமா ஒரே ஃபோன் நம்பரை யூஸ் பண்றீங்களா..? இனி உங்களுக்கு கட்டணம் தான்..!! டிராய் அதிரடி அறிவிப்பு..!!
ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும் இரண்டு சிம்கள் உபயோகப்படுத்துவது வழக்கம் தான். இதில், ஒரு நம்பரையாவது பல ஆண்டுகளாக வைத்திருப்போம். இந்நிலையில், இது போல் ஒரு நம்பரை ஒரே நபர் தொடர்ச்சியாக உபயோகப்படுத்த தனி கட்டணம் வசூலிக்க தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
செல்போன்களில் பேச ரீசார்ஜ் செய்து கொள்வது போல இனி செல்போன் எண்களை நீண்டகாலம் தொடர்ந்து பயன்படுத்தவும் பொதுமக்களிடம் தற்போது தனி கட்டணம் வசூலிக்க டிராய் முடிவு செய்துள்ளது. கடந்தாண்டு டிசம்பரில் புதிய டெலிகாம் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமோ அல்லது தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமோ தனிக்கட்டணம் விதிக்க டிராய் பரிந்துரை செய்துள்ளது.
அப்படி தனிக்கட்டணம் வசூலிப்பது உறுதியானால், அதனை வாடிக்கையாளர்களிடம் இருந்தே வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நகரங்களில் இப்படி சிம்மிற்காக தனிக்கட்டணம் வசூலிக்கும் முறை அமலில் உள்ளது. இதனை சுட்டிக்காட்டி மத்திய அரசிடம் தனிக்கட்டணம் வசூலிக்க டிராய் பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இந்த பரிந்துரையின்படி ஒருமுறையா? அல்லது ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் வசூலிப்பதா? என முடிவு செய்யப்படவில்லை.
Read More : கஞ்சா விற்கும் குற்றவாளியுடன் கூட்டு..!! தலைமைக் காவலர் சிக்கியது எப்படி..? மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!!