உங்களுக்கும் இந்த மெசேஜ் வந்துருக்கா..? பணம் பறிபோகும் அபாயம்..!! உடனே இதை பண்ணுங்க..!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால், பரிவர்த்தனைகளில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது மின் கட்டணத்தை பயன்படுத்தி மோசடி செய்யும் நபர்கள் அதிகாரப்பூர்வமான மின் துறையில் இருந்து அனுப்பும் செய்திகளை போல மக்களுக்கு அனுப்பி வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை திருடி வருகின்றனர்.
அதாவது, மெசேஜில் அன்புள்ள வாடிக்கையாளரை உங்கள் முந்தைய மாதத்திற்கான மின்சார கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை. இதனால் மின்சாரம் துண்டிக்கப்படும். இதனை தவிர்க்க உடனடியாக இந்த நம்பரை தொடர்பு கொள்ள வேண்டும் என மெசேஜ் வருகிறது. அதன் மூலம் குறிப்பிட்ட நம்பரை மக்களுக்கு அனுப்பி ஏமாற்றுகின்றனர்.
எனவே இது போன்ற செய்திகளை பார்த்தால், உடனே மக்கள் அதனை டெலிட் செய்ய வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மக்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்களை பகிர்ந்து கொள்ளக் கூடாது எனவும் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் யாரும் மக்களின் தனிப்பட்ட விவரங்களை எதற்காகவும் எப்போதும் கேட்க மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளது.