உங்கள் வீட்டில் குருவி கூடு கட்டியிருக்கிறதா? சிட்டுக்குருவி கூடு கட்டுவது நல்லதா என்பதை தெரிந்து கொள்ளுங்க!!
சிட்டு குருவிகள் நம் வீட்டில் கூடு கட்டுவது இயல்பாக நடக்கும் விஷயம் தான். அவை வீட்டிற்கு வருவதும் அவற்றின் கீச்சொலியும் மனதிற்கு இதமாக இருக்கும். குருவியின் கீச்சொலிகளை யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். இப்படி வீட்டில் பறவைகள் கூடு கட்டினால் மங்களம் உண்டாகும் என ஜோதிடம் கூறுகிறது. அதிலும் சிட்டுக்குருவிகள் நம் வீட்டை தேடி வந்து கூடு கட்டினால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் பெருகும் என்பது ஐதீகம்.
முற்காலத்தில் வீட்டு வாசலில் நெற்கதிர்களை சொருகி வைத்திருப்பார்கள். இது போன்ற பறவை இனங்கள் அவற்றை உண்டு அங்கேயே தங்கி அந்த வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை தரவல்லது என்று அவர்கள் நம்பியிருந்ததே அதற்கு காரணம்.குருவி இனங்கள் சிறப்பு மிக்கவை. இவை பெரும்பாலும் நம்முடன் ஒன்றி இருக்கவே விரும்பும். இதற்கு நல்ல சக்திகளை வீட்டிற்குள் கொண்டு வரும் திறன் உள்ளது. இதன் ஜீவ சக்தியால் பல பிரச்சனைகளில் இருந்து நம் இல்லம் காக்கபட்டு சுபீக்ஷம் அடையும்.
ஒரு இடத்தில் குருவி கூடு கட்டுவதற்கு முன்பு அந்த இடத்தில் தனது குஞ்சுகள் பாதுகாப்பாக இருக்குமா..? இந்த இடத்தில் எதிர்மறை ஆற்றல் இருக்கிறதா..? என்பதை ஆராய்ந்த பிறகு தான் கூடு காட்டவே தொடங்கும். அதாவது நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும் இடத்தில் மட்டுமே குருவி கூடு கட்டும்.
எனவே, எந்த ஒரு வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கிறதோ அந்த வீட்டில் தான் குருவி கூடு கட்டும். அதாவது அந்த வீட்டில் தெய்வ சக்தி நிறைந்திருக்கும், தீயசக்திகள் இருக்காது, வீட்டில் சண்டைகள் இருக்காது மற்றும் செய்வினை இருக்காது. இந்த அனைத்தும் இல்லாத வீட்டில் தான் குருவி கூடு கட்டும்.
குருவி எந்த திசையில் கட்டினால் நல்லது?
உங்களுடைய வீட்டின் தென்திசையில் குருவி கூடு கட்டுவது பொருளாதாரத்தை மேம்பாடு அடைய செய்யும். ஆனால் தென்மேற்கு திசையில் குருவி கூடு கட்டுவது குடும்ப உறுப்பினர்களுடைய ஆயுளை அதிகரிக்கும். மேலும் நிதி நிலை உயருவதோடு தொழிலில் கணிசமான லாபமும் கிடைக்கும்.
Read more ; நாளை வானில் தெரியும் அரிய நிகழ்வு!. ‘ஸ்ட்ராபெரி மூன்’!. இந்தியா உட்பட ஆசியா கண்டம் முழுவதும் தெரியும்!