இரவில் கெட்ட கனவு வந்துட்டே இருக்கா.. இதுக்கு என்ன தான் தீர்வு?
இரவில் உறங்கும்போது கனவு வருவது இயற்கையானது தான். பல நேரங்களில் நல்ல கனவுகளும் சில நேரங்களில் கெட்ட கனவுகளும் வந்து போகிறது. சிலருக்கு கெட்ட கனவுகள் வந்து கொண்டே இருப்பதாக புலம்புவதும், சிலர் நல்ல கனவுகள் வந்தன என மகிழ்ச்சியாக இருப்பதும் உண்டு. இதற்குப் பல காரணங்களை நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
ஜோதிடத்தின் படி, ராகு கனவுகளின் அதிபதி என்று அழைக்கப்படுகிறார். ராகு சந்திரனுடன் இருக்கும்போது இதுபோன்ற கனவுகள் வரும். சிலருக்கு நல்ல கனவுகளும் சிலருக்கு கெட்ட கனவுகளும் இருக்கும். ஜோதிட ரீதியாக கனவு எதிர்காலத்தை குறிக்கும் என சொல்வார்கள். ஆனால் சில நேரங்களில் கெட்ட கனவுகள் தொடர்பில்லாதவையாக வரும். இத்தகைய கனவுகள் நாளை என்ன நடக்கும் என்ற பயத்தை நமக்குள் ஏற்படுத்தும். இதற்கு ஜோதிட தீர்வும் உண்டு.
தேங்காய் நீர் : தூங்குவதற்கு முன் நெற்றியில் தேங்காய் நீரை தடவலாம். அது உங்களை கனவில் இருந்து தடுக்கிறது. அதுமட்டுமின்றி தலையில் தேங்காய் எண்ணெயை வைத்து தூங்குவது நன்றாக தூங்க உதவும்.
பூண்டு கிராம்பு : தூங்குவதற்கு முன் உங்கள் தலையணையின் கீழ் பூண்டு, கிராம்புகளை வைக்கவும். அதனால் உங்களுக்கு கெட்ட கனவுகள் வராது. இது உங்களுக்கு கெட்ட கனவுகள் வராமல் தடுப்பது மட்டுமில்லாமல் தூக்க பிரச்னையையும் தீர்க்கிறது.
சோம்பு : பூண்டு மட்டுமின்றி சோம்பை, வெள்ளை துணியில் போட்டு படுக்கை அடியில் போட்டு இரவில் தூங்கவும். தலையணைக்கு அடியில் இப்படி வைத்து தூங்குவது கெட்ட கனவுகளைத் தடுக்கும்.
தரையை சுத்தம் செய்தல் : கெட்ட கனவுகள் உங்களை மீண்டும் மீண்டும் வாட்டி வதைத்தால், முதலில் வீட்டின் தரையை உப்பு நீரால் துடைக்கவும். முக்கியமாக படுக்கைக்குச் செல்வதற்கு முன் உப்பு நீரில் தரையைத் துடைப்பது உங்களுக்கு உதவும்.