முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உங்கள் நிலத்திற்கு வேறு ஒருவர் பட்டா வாங்கிட்டாரா..? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..

Has someone else bought the title to your land?
02:04 PM Jan 09, 2025 IST | Mari Thangam
Advertisement

ஒரு சொத்தை வாங்குவதற்கு மிக முக்கிய ஆவணம்,பட்டா. பட்டா என்பது ஒரு நிலப்பகுதிக்கு சட்ட உரிமையை நிரூபிக்க வேண்டிய வருவாய் ஆவணம் . பதிவாளரால் வழங்கப்படும் இதை தாசில்தார் அலுவலகத்திலிருந்து பெற வேண்டும். பட்டாவை உங்களது பெயரில் சரியாகப் பெறுவதே நல்லது. நிலம் தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு பட்டா அத்தியாவசிய ஆவணமாகும். ஒருவேளை உங்கள் நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்த முனைந்தாலும் பட்டா இருந்தால் மட்டுமே அதற்கான உரிய நிவாரணம் கிடைக்கும்.

Advertisement

வேறு ஒருவர் நிலத்திற்கு பட்டா : பல ஆண்டுகளாக ஒரு நிலத்தை யாரும் உரிமை கோராத நிலையில், அதை புறம்போக்கு நிலமாக கருதி மக்கள் ஆக்கிரமிக்கின்றனர். அப்படி ஆக்கிரமித்தவர்கள் அதற்கான பட்டாவையும் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அதற்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. ஏனென்றால், அரசு துறை நிலத்தை போல் தனியார் நிலத்தை ஆக்கிரமித்து பட்டா பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஆனாலும் அதை சிலர் செய்கின்றன்ர்.

தனியார் பெயரில் பட்டா வழங்கப்பட்ட நிலத்தை அவர் தலையீடு இன்றி, வேறு ஒருவர் தொடர்ந்து 14 ஆண்டுகள் அந்த நிலத்தை எந்தவித வாடகையும் செலுத்தாமல் பயன்படுத்தி வந்ததற்காக ஆதாரம் சமர்பிக்க வேண்டும். அத்துடன் அந்த நிலத்துக்கான வரிகளை ஆக்கிரமித்தவர்கள் செலுத்தியிருந்தால், அதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.

அப்படி தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் பட்டா வழங்க வேண்டிய வருவாய்துறையினர், முதலில் வருவாய் ஆவணங்களின் அடிப்படையில் உண்மையான உரிமையாளரை கண்டுபிடித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்புவார்கள். அதாவது இன்னார் உங்களின் நிலத்திற்கு பட்டா கேட்கிறார் கொடுக்கலாமா? என்று நோட்டீஸ் அனுப்புவார்கள். அதற்கு பதில் அளிக்காமல், எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காமல் உரிமையாளர் இருந்தால், ஆக்கிரமிப்பாளர் பெயருக்கு பட்டா வழங்கப்படும்.

அதேநேரம் உண்மையான உரிமையாளர் காணாமல் போய்விட்டார். எங்கு இருக்கிறார். எப்படி இருக்கிறார் என்று தெரியாத நிலையை ஆக்கிரமிப்பாளர் தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அதேசமயம், உண்மையான உரிமையாளருக்கு சட்ட ரீதியாக நிலத்தை காப்பாற்றிக்கொள்ள அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படும். ஆனால், வாய்ப்புகளை தவறவிட்டால் ஆக்கிரமிப்பாளருக்கு பட்டா வழங்கப்படும்.

நீதிமன்ற ஆணைகள் மூலமாகவும் ஒருவர் காணாமல் போய்விட்டார் என்பதை நிரூபித்து பட்டா பெற முடியும் என்பதால் நிச்சயம் வீட்டு மனை வைத்திருப்போர் கவனமாக இருக்க வேண்டும். ஆகையால், உங்கள் நிலத்தை முறையாக பராமரித்து வாருங்கள். யாராவது ஆக்கிரமிக்கிறார்களா என்பதை அறிய 3 மாதத்திற்கு ஒருமுறையாவது உங்கள் நிலத்தை போய் பார்கக வேண்டும்.

உங்கள் இடத்தை சுற்றி வேலிகளை கண்டிப்பாக போட்டு வையுங்கள். உங்கள் பத்திரங்களின் நகலை யாரிடமும் கொடுக்க வேண்டாம். அதை வைத்து போலி பத்திரங்களை தயாரிக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் பெயரில் பத்திரம் இருந்து பட்டா இல்லை என்றால், உடனே பட்டா மாற்றம் செய்யுங்கள். பட்டா மாற்றம் செய்யாவிட்டால் சிக்கல் ஆகிவிடும்.

Read more ; ”நாளைக்கு எல்லோரும் ஸ்பாட்ல இருக்கணும்”..!! தவெக மாவட்ட நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு..!! விஜய் காட்டும் அதிரடி ஆக்‌ஷன்..!!

Tags :
LandProperty
Advertisement
Next Article