For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”இத்தனை நாள் பரந்தூரை மறந்துவிட்டாரா”..? ”இப்போது மட்டும் என்ன”..? விஜய்யை கடுமையாக தாக்கி பேசிய தமிழிசை..!!

What if you've been told to change locations for so many years? Why didn't you say this on the first day?
04:24 PM Jan 21, 2025 IST | Chella
”இத்தனை நாள் பரந்தூரை மறந்துவிட்டாரா”    ”இப்போது மட்டும் என்ன”    விஜய்யை கடுமையாக தாக்கி பேசிய தமிழிசை
Advertisement

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டக் குழுவினரை நேற்று தவெக தலைவர் விஜய் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய விஜய், ”நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. விமான நிலையம் வரக்கூடாது என்று நான் சொல்லவில்லை. இந்த இடத்தில் வேண்டாம் என்று தான் சொல்கிறேன்” என தெரிவித்திருந்தார்.

Advertisement

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ”மக்கள் 910 நாட்கள் விமான நிலையம் அமைய வேண்டாம் என போராடி வருகின்றனர். 910-வது நாள் விஜய் போகிறார். விஜய் பரந்தூருக்கு பறந்து போனாரா? அல்லது மறந்து போனாரா? இதுவரை மறந்து போன அவர் திடீரென பரந்தூருக்கு பறந்து சென்றார் என்றால் என்ன அர்த்தம்..?

சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்த சமயத்தில் பரந்தூர் மக்களின் சத்தம் அவருக்கு கேட்கவில்லையா? சினிமா முடிந்த பிறகு இப்போது மக்கள் சத்தம் கேட்கிறதா? இது மாநில அரசு தேர்வு செய்து கொடுத்த இடம். உண்மையில் நாங்கள் விவசாயிகளை எதிர்த்து செயல்படவில்லை. நாங்களும் அவர்களுக்கு ஆதரவு தான். இதே விஜய் விவசாயிக்கு கொடுக்கும் சலுகைகளை இன்னும் அதிகமாக வழங்க வேண்டும்.

அவர்கள் மேல் உள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று போராடினால் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளலாம். இவ்வளவு வருஷம் இடத்தை மாற்றுங்கள் என்று சொன்னால் என்ன செய்வது? ஏன் முதல் நாளில் இதனை சொல்லவில்லை? அந்த இடத்தில் வேண்டாம் என்றால் நீங்கள் ஒரு நல்ல இடம் சொல்லுங்கள். இவ்வளவு ஆண்டுகள் இது பற்றி பேசாமல் திடீரென பரந்தூருக்கு அவர் பறந்து வந்தால் அது பொது நலமா? அல்லது சுயநலமா? என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்” என விஜய்யை விமர்சித்துள்ளார்.

Read More : ”உன் பொண்ண என் வீட்டுக்கு அனுப்பி வை”..!! ஆத்திரத்தில் மாமனார், மாமியாரை அரிவாளால் வெட்டி சாய்த்த மருமகன்..!!

Tags :
Advertisement