விஜய்க்கு என்ன கொள்கை இருக்கு..? தவெக-வை கடுமையாக விமர்சனம் செய்த எம்.பி கார்த்தி சிதம்பரம்...!
இது வரை யாரையாவது நடிகர் விஜய் விமர்சித்திருக்கிறாரா? என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றி வருகிறது. கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து கட்சியின் தலைவர் விஜய், மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் வருகிற 23-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதற்கான அனுமதி வேண்டி, கடந்த 28-ம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநாடு நடத்த தமிழக காவல்துறையான அனுமதி வழங்கியுள்ளது. மாநாட்டில் சுமார் 50,500 பேர் பங்கேற்க உள்ளதாக காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நடிகர் விஜய்யின் கட்சியில் மாற்றுக் கட்சியில் இருந்து பல்வேறு மூத்த அரசியல் தலைவர்களை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடந்து வருகிறது. இதுவரை யாரையாவது நடிகர் விஜய் விமர்சித்திருக்கிறாரா?" என எம்பி கார்த்திக் சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேட்டியளித்தார் அவர் கூறுகையில், "விஜய்க்கு என்ன கொள்கை இருக்கு? அவரிடம் ஒரு ரசிகர் கூட்டம் இருப்பதால் ஊடகங்கள் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. காங்கிரஸுக்கு மாற்றாக உருவான கட்சி திமுக. அப்படி எந்தக் கட்சிக்கு மாற்றாக விஜய் வந்திருக்கிறார். இதுவரை யாரையாவது விஜய் விமர்சித்திருக்கிறாரா?" என கேள்வி எழுப்பி உள்ளார்.