"Virat Kohli - ஐ விட சிறந்த வீரர் ஹர்திக் பாண்டியா.." முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் சர்ச்சை பேட்டி.!!
Virat Kohli: 2024 ஆம் வருட t20 உலக கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வைத்து ஜூன் 2-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை பிசிசிஐ தேர்வு குழு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த அணியில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பெற்று இருப்பது பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.
2023 ஆம் வருட உலகக் கோப்பை தொடரின் போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய பாண்டியா தனது உடல் தகுதியை நிரூபித்து ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். கடந்த வருடம் குஜராத் அணிக்காக விளையாடிய ஹர்திக் பாண்டியா இந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் இந்த வருட ஐபிஎல் தொடரில் மும்பை அணி பத்து போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை மட்டுமே பெற்று இருக்கிறது. கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சிலும் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதுவரை 10 போட்டியில் விளையாடிய அவர் 197 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார் . இதன் காரணமாக அவரது தேர்வு குறித்து பலரும் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். இது குறித்து பேசி இருக்கும் கைஃப், ஐசிசி போட்டி தொடர்களில் ஹர்திக் பாண்டியா ஒரு சிறந்த வீரர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் விராட் கோலி(Virat Kohli) மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் ஹர்திக் பாண்டியா என தெரிவித்திருக்கிறார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.