For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மதுப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! தமிழ்நாட்டில் 100% கோதுமையால் தயாரான பீர்..!! விலை எவ்வளவு தெரியுமா..?

11:17 AM Apr 25, 2024 IST | Chella
மதுப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்     தமிழ்நாட்டில் 100  கோதுமையால் தயாரான பீர்     விலை எவ்வளவு தெரியுமா
Advertisement

முதல் முறையாக, கோதுமையில் தயாரிக்கப்பட்ட பீர் உள்ளிட்ட 5 வகை புதிய பீர்களை விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டை பொறுத்தவரை மதுவிலக்கு என்பது கனவாகவே போய் கொண்டிருக்கும் நிலையில், மற்றொருபுறம் டாஸ்மாக்குகள் மூலம் கிடைக்கும் வருவாய் அரசுக்கு ஓவராக கொட்டிக் கொண்டிருக்கிறது. மொத்த நிதி ஆதாரத்தில் 3ல் ஒரு பங்கு வருமானம் மதுக்கடைகள் மூலம் கிடைத்து வருகிறது. அந்தவகையில், மாநிலத்தில் மொத்தம் 4,829 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கிறது. தினமும் சராசரியாக 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை தினங்களில் அதற்கு அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாகின்றன.

இப்படிப்பட்ட சூழலில், குடிமகன்களுக்கு இன்னொரு மகிழ்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. தற்போது கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில், பீர் விற்பனை அதிகரித்துள்ளது. அதனால், மதுக்கடைகளுக்கு ஏராளமான பீர்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தினமும், 60,000 பெட்டிகளாக இருந்த பீர் விற்பனையானது வெயில் காரணமாக, 1 லட்சம் பெட்டிகளை தாண்டி கொண்டிருக்கிறது.

இப்போது மதுக்கடைகளில் கிட்டத்தட்ட 35 பீர் வகைகள் விற்கப்படுகின்றன. எனினும், புதிய வகை மதுபானங்களை விற்குமாறு, டாஸ்மாக்கிற்கு கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அதனால்தான், 100% கோதுமையில் தயாரிக்கப்பட்ட, "100% வீட் பீர்" என்ற பெயரில் புதிய பீர் அறிமுகம் செய்ய போகிறார்களாம். இந்த வீட் பீர் விலை 190 ரூபாய், காப்டர் வகை பீர்கள் 160 ரூபாய் - 170 ரூபாய் விலையில் கிடைக்க போகிறதாம். 5 வகை புதிய பீர்களை விற்க டாஸ்மாக் நிர்வாகமும் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'டிராபிக்கல்' என்ற நிறுவனத்திடமிருந்து பீர் வாங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் ஆலையில், இன்னொரு நிறுவனமும் பீர் உற்பத்தி செய்கிறது. அதனால், தட்டுப்பாடு இல்லாமல் கடைகளுக்கு, அனைத்து வகை பீர்களும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இப்போதைக்கு கையிருப்பில், 10 லட்சம் பெட்டி பீர் வகைகள் இருந்தாலும், புதிய வகை பீர்கள் விரைவில் கடைகளில் கிடைக்கும்" என்றனர்.

Read More : தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென வெடித்த ஃபிரிட்ஜ்..!! பரபரப்பில் ராணிப்பேட்டை..!! என்ன காரணம்..?

Advertisement