Happiness: சந்தோஷம்! சந்தோஷம்! வாழ்க்கையில் பாதி பலம்!… இன்று சர்வதேச மகிழ்ச்சி தினம்!
Happiness: மகிழ்ச்சி எது எனக் கேட்டால் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு அர்த்தத்தைக் கூறுவார்கள். போர் மற்றும் வறுமையை உலகளவில் முடிவுக்குக் கொண்டுவருவதே மகிழ்ச்சி என ஐ.நா. சபை கருதுகிறது. மகிழ்ச்சியே மனிதனின் அடிப்படை லட்சியம் என்கிற அடிப்படையில் ஐ.நா. பொதுச்சபை 2012ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று மார்ச் 20ஆம் தேதியை சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது. வசந்தம் என்றாலே பொதுவாக எல்லோர் மனதிலும் மகிழ்ச்சி ஏற்படுவது வழக்கம் தானே. ஆனால் புன்னகையையோ மகிழ்ச்சியையோ நாம் எப்போதும் வெளிப்படுத்துவதில்லை. ஏனெனில் அதற்கான வழிகளை நாம் அறிவதில்லை.
மனப்பான்மையை மாற்றுவது சில நேரங்களில் நேர்மறையான மாற்றத்திற்கு வழிவகுக்கும். நம் மகிழ்ச்சிக்கு நாமே பொறுப்பு என்பது உண்மைதான். தனக்கான நேரத்தை மறந்துவிடாதீர்கள், தினமும் நாம் நமக்கென்று சிறிது நேரத்தை ஒதுக்கி, அந்த நேரத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதிக அர்ப்பணிப்பு வேண்டாம் செய்யாதீர்கள், ஆசைப்படுங்கள் ஆனால் உங்கள் மன அமைதியை இழக்கும் அளவுக்கு அதிக அலட்சியமாக இருக்காதீர்கள்.
மன அழுத்தத்தைக் குறைக்க நினைவில் கொள்ளுங்கள், ஏனெனில் யோகா, தியானம், உடற்பயிற்சி ஆகியவை மகிழ்ச்சியின் அளவை அதிகரிப்பதற்கான வழிமுறையாகும். உங்கள் வாழ்க்கையில் வரும் அனைத்தையும் பாராட்டுங்கள். நல்ல அனுபவங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. எதிர்மறையான அனுபவங்கள் இதுவரை கற்றுக்கொள்ளாத பாடங்களைக் கற்றுத் தருகின்றன. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவது உங்கள் மகிழ்ச்சியின் அளவை அதிகரிக்க ஒரு சிறந்த வழியாகும்.
மற்றவர்களுக்காக சில காரியங்களைச் செய்யுங்கள், இதன்மூலம் நீங்கள் முழு உலகத்தின் மகிழ்ச்சி மற்றும் துக்கங்களுடன் இணைக்கப்படுவீர்கள். வாழ்க்கையில் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். வாழ்க்கையில் நடக்கும் அனைத்திற்கும் எப்போதும் நன்றியுடன் இருங்கள். உங்கள் வாழ்வில் மோசமான கட்டங்களும் அனுபவங்களும் அவ்வப்போது வருவது வழக்கம். அப்போதெல்லாம் அதைக் குறித்து வைத்து விட்டு மனதில் இருந்து அதை விலக்கி வைக்குமாறு ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றார்கள். அல்லது குறித்த அனுபவத்தின் பின் வீடு சென்று பிடித்தமான புத்தகம் வாசித்தல் அல்லது பிடித்தமான செயல் ஏதிலும் ஈடுபடுதல் மூலம் மனதை திசை திருப்புமாறும் இது உடனடி மகிழ்ச்சியைக் கொண்டு வரும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நம்மில் பலருக்கு பாடல்களை ரசிக்க பிடிக்கும். ஆனால் பாட மாட்டோம். விஞ்ஞானிகள் சொல்வது என்னவென்றால் எப்போதெல்லாம் சிறிது ஓய்வு கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் ரேடியோ மற்றும் ஆடியோ பாடல்களின் சத்தத்தை சற்று அதிகரித்து அந்த இசையுடன் சேர்ந்து பாடுங்கள் என்கிறார்கள். உதாரணமாக வீட்டில் குளிக்கும் போதோ, டிராபிக் ஜேமில் மாட்டிக் கொண்டிருக்கும் போதோ அல்லது வேறு ஓய்வு நேரங்களிலோ இந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளானர்.
Readmore: பொங்கி எழுந்த ஸ்டாலின்!… பகிரங்க மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர்!