ஹமாஸ் இராணுவத் தலைவர் முகமது டெய்ஃப் உயிருடன் இருக்கிறார்!. மூத்த அதிகாரி தகவல்!
Mohammad deif: தனது அமைப்பின் ராணுவத் தலைவர் முகமது டெய்ஃப் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீது கடந்தாண்டு அக்டோபரில் ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் ராணுவத்தினர் 251 பேர் காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 39 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த போரின்போது ஹமாஸ் அமைப்பின் தளபதியாக செயல்பட்ட முகமது டெய்ஃப், தமது ராணுவப் படைகளுக்கு கட்டளை இட்டதாகவும், ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவிக்கிறது.
இஸ்ரேலுக்கு எதிராக பல ஆன்டுகளாக பல்வேறு தாக்குதல்களை நடத்திய ஹமாஸ் ராணுவத்தின் தளபதி முகமது டெய்ஃப், கான் யூனிஸில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஆகஸ்ட் 1ம் தேதி இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது. ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், முகமது டெய்ஃப் உடைய மரணத்தையும் இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்தது.
அதாவது, கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக இஸ்ரேலின் மிகவும் தேடப்படும் நபர்களில் ஒருவராகவும், 2015ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலிலும் இருந்து வந்த முகமது டெய்ஃப், காசாவின் தெற்குப் பகுதியான கான் யூனிஸில் கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக உளவுத்துறையின் அறிக்கையை தொடர்ந்து உறுதி செய்திருந்தது.
ஆனால், இஸ்ரேல் ராணுவம் கடந்த ஜூலை 13ஆம் தேதி காசாவின் கான் யூனிஸில் உள்ள முகமது டெய்ஃப் வசித்து வரும் பகுதியில் தாக்குதல் நடத்தியது. அதில் கிட்டத்தட்ட 90 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்த ஹமாஸ், அந்த தாக்குதலில் முகமது டெய்ஃப் இல்லை என மறுப்பு தெரிவித்து வரும்நிலையில், தனது அமைப்பின் ராணுவத் தலைவர் முகமது டெய்ஃப் இன்னும் உயிருடன் இருப்பதாக ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
செய்தி நிறுவனமான அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் பேசிய ஹமாஸின் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்தான், முகமது டெய்ஃப் நலமாக உள்ளார் என்று கூறியுள்ளார். ஹமாஸ் அதிகாரியின் இந்த அறிக்கை இஸ்ரேலின் அறிக்கைக்கு நேர்மாறாக உள்ளது.
Readmore: இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்திருந்தால்!. சீனாவை விட நமது மக்கள் தொகை எவ்வளவு அதிகமாக இருக்கும்?