முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு..!! டவுன்லோடு செய்வது எப்படி..?

As the TNPSC Group 4 exam is going to be held on 9th June, the hall ticket has been released today.
06:16 PM May 27, 2024 IST | Chella
Advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாகவுள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 6,244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்தநிலையில், இன்று (மே 27) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அதனை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.

குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?

* முதலில் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான www.tnpsc.gov.in என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அதில் ஏற்கனவே பதிவு செய்தோர் என்ற பொத்தானை அழுத்தவும்.

* பின்னர் உங்கள் நிரந்தரப் பதிவு மற்றும் கடவுச்சொல் கொண்டு உள்நுழையவும்.

* இப்போது திரையில் உங்கள் சுயவிவர பக்கத்தில், ஹால்டிக்கெட் என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

* இப்போது திரையில் தோன்றும் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு (CCSE-IV) 2024 என்பதற்கு நேராக டவுன்லோட் ஹால் டிக்கெட் என்று இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.

* இப்போது திரையில் தோன்றும் புதிய பக்கத்தில் உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதிக் கொண்டு உள்நுழைய வேண்டும்.

* இப்போது திரையில் குரூப் 4 தேர்வு ஹால்டிக்கெட் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Read More : ’தோல்விக்கு அவரே காரணம்’..!! காங்கிரஸ் தலைவர் பதவியை இழக்கும் மல்லிகார்ஜுன கார்கே..? அமித்ஷா அனல் பறக்கும் பேச்சு..!!

Tags :
group 4 exam hall ticket 2024group 4 hall ticket 2024group 4 hall ticket 2024 release dategroup 4 hall ticket download 2024how to download tnpsc group 4 hall ticket 2024tnpsc group 4tnpsc group 4 exam hall ticket 2024tnpsc group 4 exam hall ticket download 2024tnpsc group 4 exam study plan 2024tnpsc group 4 hall ticket 2024tnpsc group 4 hall ticket 2024 downloadtnpsc group 4 hall ticket download 2024tnpsc group 4 notification 2024
Advertisement
Next Article