For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு..!! பதிவிறக்கம் செய்வது எப்படி..?

08:07 AM May 02, 2024 IST | Chella
நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு     பதிவிறக்கம் செய்வது எப்படி
Advertisement

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (NEET UG 2024) ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை (NTA) நேற்று வெளியிட்டது. நீட் தேர்வு மே 5 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியான நிலையில், இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலுடன் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

Advertisement

நீட் தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?

* தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்: https://nta.ac.in/

* "NEET UG 2024 அட்மிட் கார்டு"க்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.

உங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு எண்ணை உள்ளிட வேண்டும்.

* உங்கள் உள்நுழைவுச் சான்றுகளைச் சமர்ப்பித்து அட்மிட் கார்டைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

* எதிர்கால குறிப்புக்காக அட்மிட் கார்டின் நகலை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* தேர்வு மையத்திற்கு செல்லுபடியாகும் புகைப்பட அடையாளச் சான்றிதழுடன் உங்கள் ஹால் டிக்கெட்டின் பிரிண்ட் அவுட்டை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

* ஹால் டிக்கெட்டில், தேர்வரின் பெயர், தேர்வு எண், தேர்வு தேதி மற்றும் நேரம், தேர்வு மைய முகவரி, தேர்வு நாளுக்கான முக்கிய வழிமுறைகள் ஆகியவை இருக்கும்.

Read More : EMIஇல் பொருட்கள் வாங்கும் முன் இந்த விஷயத்தை மறந்துறாதீங்க..!! சிக்கல் உங்களுக்கு தான்..!!

Advertisement