For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Hall Ticket : நாளை முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்...!

06:50 AM Mar 19, 2024 IST | 1newsnationuser2
hall ticket   நாளை முதல் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்
Advertisement

10-ம் வகுப்பு மாணவர்கள் ஹால் டிக்கெட்டை மார்ச் 20-ம் தேதி காலை முதலும், தேர்வு மைய படிவங்களை அதே நாளில் பிற்பகல் முதலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Advertisement

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை மார்ச் 15-ம் தேதியும், தேர்வு மைய படிவங்களை 16-ம் தேதியும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு, ஹால் டிக்கெட்டை மார்ச் 20-ம் தேதி காலை முதலும், தேர்வு மைய படிவங்களை அதே நாளில் பிற்பகல் முதலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

அதே போல 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய பள்ளிகளுக்கு மார்ச் 18-ம் தேதி வரை அரசு தேர்வுத் துறை அவகாசம் முடிந்தது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வுத் துறை இணையதளத்துக்கு சென்று, தங்கள் பள்ளிக்கான பயன்பாட்டாளர் எண், கடவுச்சொல்லை பயன்படுத்தி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுதான் முடிந்தது.

Advertisement