For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விட்டாச்சு லீவ்...! இன்று முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை...!

Half-yearly holiday from today until January 1st
06:34 AM Dec 24, 2024 IST | Vignesh
விட்டாச்சு லீவ்     இன்று முதல் ஜனவரி 1 ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை
Advertisement

பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புக்கு வருகிற 16ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும், 6 முதல் 12 வரை 9ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Advertisement

ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு பள்ளிகளில் வௌ்ள நீர் சூழ்ந்தது. இதனால் மூன்று மாவட்டங்களுக்கு மட்டும் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் அரையாண்டு விடுமுறை ரத்து செய்யப்படுமா என்ற சந்தேகம் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு பள்ளிகள் திறந்தவுடன் தேர்வுகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்களுக்கு திட்டப்படி இன்று முதல் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று முதல் ஜனவரி 1ம் தேதி அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. . மொத்தம் 9 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடக்கிறது. இதில், புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை வருகிறது. மீண்டும் ஜனவரி இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

Tags :
Advertisement