சவுக்கு சங்கர் காரில் அரை கிலோ கஞ்சா…! போதைப்பொருள் உட்பட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு..! மே 17 ஆம் தேதி வரை சிறை..!
காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த விவகாரத்தில், தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது அங்கிருந்த பெண் அதிகாரியை சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருப்பவர்கள் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
பிறகு யூடியூபர் சவுக்கு சங்கர் தங்கியிருந்த ஹோட்டல் அறை மற்றும் காரில் சோதனை நடத்தப்பட்டது. இதனையடுத்து சவுக்கு சங்கரின் காரில் தடை செய்யப்பட்ட அரை கிலோ கஞ்சா மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சவுக்கு சங்கர் மற்றும் இருவர் மீது பெண் வன்கொடுமை, போதை பொருள் தடுப்பு சட்டம், அரசு அதிகாரிகளை பனி செய்யாமல் தடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை மாநகர காவல்துறையின் விசாரணைக்குப் பிறகு கோவை நீதிமன்றத்துக்கு சவுக்கு சங்கர் அழைத்துச்செல்லப்பட்டார். சவுக்கு சங்கரை 17ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் இருந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.