விசிகவுக்கு ஆதரவு அளிக்கும் பாஜக..!! எச்.ராஜா சொன்ன மேட்டர்? யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்..
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. திமுகவின் முக்கிய கூட்டணி கட்சியாக விசிக இருந்து வருகிறது. இந்த நிலையில், முருகன் மாநாடு விவகாரத்தில் திமுக மீது விசிகவினர் வைத்த விமர்சனம் தொடங்கி, மது ஒழிப்பு மாநாடு அறிவிப்பு வரை, திமுக கூட்டணிக்கு நெருக்கடி தரும் வகையில் விசிக-வின் செயல்பாடுகள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
மேலும், விசிக நடத்தும் இந்த மாநாட்டில் அதிமுக-வும் பங்கேற்கலாம் என்று திருமாவளவன் கூறியதும் கவனம் பெற்றது. இதுபோன்ற சூழலில், அமெரிக்கா பயணம் முடிந்து சென்னைக்கு வந்த முதல்வர் ஸ்டாலிடம், விசிகவின் மது ஒழிப்பு மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, '' விசிக மாநாடு குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அது குறித்து நான் விளக்கம் சொல்ல ஒன்றும் இல்லை'' என கூறிவிட்டார்.
முதல்வர் இவ்வாறு பதில் அளித்த சில மணி நேரங்களில் விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் மும்பு பேசிய ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ''ஆட்சியிலும் பங்கு .. அதிகாரத்திலும் பங்கு.. கடைசி மனிதனுக்கும் சனநாயகம் ! எளிய மக்களுக்கும் அதிகாரம்!..'' என குறிப்பிட்டுள்ள திருமாவாவன் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தும் வகையில் பேசியுள்ளார்.
தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டது தான் பரபரப்பான விஷயமாக பேசப்படுகிறது. இதற்கு திராவிட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சீமான் உள்ளிட்ட ஒரு ஆதரவு கொடுத்தனர். அந்த வகையில் தற்போது பாஜக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எச். ராஜாவும் திருமாவளவன் கருத்துக்கு வரவேற்பு கொடுத்துள்ளார்.
அதாவது ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு கேட்கும் திருமாவின் நியாயமான கோரிக்கையை தாங்கள் வரவேற்பதாக எச். ராஜா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். அவருடைய கோரிக்கைக்கு பாஜக 100 சதவீதம் ஆதரவு கொடுப்பதாக எச். ராஜா தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 1997 ஆம் ஆண்டு மத்தியில் கூட்டணி ஆட்சி நடைபெறுவதாக சுட்டிக்காட்டிய திருமாவளவன் தனி பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றாலும் கூட ஆட்சியை கூட்டணி கட்சிகளுக்கும் பகிர்ந்து கொடுத்துள்ளதாக பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .
Read more ; குட் நியூஸ் மக்களே.. புற்றுநோய்க்கு தடுப்பூசி வந்தாச்சு!! முதல் கட்ட சோதனையே 100% சக்சஸ்..