ஜிம்மிற்கு வந்த ஆன்டி மீது ஏற்பட்ட ஆசை; பயிற்சியாளர் செய்த காரியத்தால் பரபரப்பு..
சென்னை யானை கவுனியைச் சேர்ந்த சூர்யா. இவர் கீழ்ப்பாக்கம் ஹார்லேஸ் சாலையில் செயல்பட்டு வரும் ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக உள்ளார். இந்நிலையில், 30 வயதான பெண் ஒருவர், தனது உடல் எடையை குறைப்பதற்காக அந்த ஜிம்மிற்கு அவர் தினமும் சென்று வந்துள்ளார். அந்தப் பெண்ணின் கணவர் வடமாநிலத்தில் வேலை செய்து வரும் நிலையில், அவருக்கும் சூர்யாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், இவர்களின் பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், சூர்யாவின் நடத்தை பிடிக்காத ஜிம் நிர்வாகம், சூர்யாவை கடந்த டிசம்பர் மாதம் அவரை பணிநீக்கம் செய்துள்ளது. இதையடுத்து, அந்தப் பெண்ணும் சூர்யாவுடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சூர்யா, ஜிம்மிற்குச் வந்த அந்தப் பெண்ணின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணும் சூர்யாவுடன் பேசுவதை தவிர்ந்துவந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணும் சூர்யாவுடன் பேசுவதை தவிர்ந்துவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சூர்யா, ஜிம்மிற்கு வந்த அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் தன்னுடன் பழைய மாதிரி பேசவில்லை என்றால், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், சம்பவம் தொடர்பாக கீழ்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.