For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு"..!! உடைந்த சிலைகள், சிவலிங்கம் புகைப்படங்கள் வெளியானதால் சர்ச்சை..!!

04:56 PM Jan 26, 2024 IST | 1newsnationuser7
 ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு      உடைந்த சிலைகள்  சிவலிங்கம் புகைப்படங்கள் வெளியானதால் சர்ச்சை
Advertisement

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி இந்து கோவில்களின் மீது கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் மசூதி வளாகத்தில் இந்து தெய்வங்களின் சிலைகள் மற்றும் பிற உருவப்படங்கள் இருந்ததற்கான தடயங்கள் இருப்பதாக வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

இந்திய தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களில் ஹனுமான் விநாயகர் மற்றும் நந்தி சிலையின் உடைந்த பாகங்கள் இடம் பெற்றிருக்கிறது. மேலும் அடிப்பகுதி உடைந்த நிலையில் இருக்கும் சிவலிங்கமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே செய்தி நிறுவனத்தின் குறிப்புகள் தெரிவித்து இருக்கின்றன. இந்திய தொல்லியல் துறையை பிரத்தியேகமாக அணுகி உள்ள இந்தியா டுடே அந்தத் தகவல்களின் அடிப்படையில் இந்த செய்தியை வெளியிடுவதாகவும் தெரிவித்திருக்கிறது.

மேலும் இந்த ஆய்வு அறிக்கையில் பழமையான பாரசீக மொழியில் அச்சடிக்கப்பட்ட நாணயங்கள் மணல் கல் அடுக்கு உடைந்த சிலைகள் போன்ற பொருட்களும் சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை 839 பக்கங்களை கொண்ட ஆய்வறிக்கையை ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் சமர்ப்பித்திருக்கிறது. மேலும் இந்த ஆய்வு அறிக்கையில் இருக்கும் தகவல்கள் மற்றும் புகைப்படங்களின் அடிப்படையில் இந்த மசூதி இந்து கோவிலின் இடுப்பாடிகளின் மேல் கட்டப்பட்டுள்ளதாக இந்து மக்களின் தரப்பு தெரிவித்து இருக்கிறது.

இது தொடர்பாக பேசியிருக்கும் இந்து தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கூறுகையில் " உடைந்த சிலைகளின் அளவீடுகள் மற்றும் அவற்றின் தோற்றத்தை வைத்து பார்க்கும் போது எங்களது கூற்றுக்கு வலு சேர்க்கிறது. மேலும் மசூதியின் கட்டுமானத்தில் இந்து தெய்வங்களின் உடைந்த சிலை பாகங்கள் மற்றும் தூண்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 17 ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசர் அவரது ஆட்சி காலத்தில் பழமை மிக்க இந்து கோவில்கள் இடிக்கப்பட்டதற்கான ஆதாரமாக பாரசீக கல்வெட்டுகள் இருக்கின்றன. அவை இந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கும் விவரங்களை சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த கண்டுபிடிப்புகள் ஞானவாபி மசூதி இருந்த இடத்தில் 17ஆம் நூற்றாண்டில் ஆதிவிஸ்வரர் கோவில் இருந்ததாகவும் அதனை இடித்து அவுரங்கசீப் இந்த மசூதியை கட்டியதாகவும்
விஷ்ணு சங்கர் ஜெயின் தெரிவித்திருக்கிறார்

எனினும் இஸ்லாமியர்களின் பிரதிநிதியும் அஞ்சுமன் அஞ்சமியா மஸ்ஜித் கமிட்டியை சேர்ந்தவருமான அக்லாக் அகமது என்பவர் இந்தக் கூற்றுக்களை முற்றிலுமாக மறுத்திருக்கிறார். தற்போது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் இதற்கு முன்பு நீதிமன்றம் வலியுறுத்தியதை தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களையே மீண்டும் நிரூபிப்பதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இரண்டு ஆதாரங்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் இருக்கிறது. தற்போது இந்த ஆதாரங்களை இந்திய தொல்லியல் துறை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. ஹிந்து தரப்பில் கூறப்படும் கருத்துக்கள் ஆதாரம் அற்றவை. மேலும் தற்போது நடைபெற்ற ஆய்வில் நிபுணர்களின் நடவடிக்கைகள் மற்றும் ஆதாரங்கள் தவறானவை என தெரிவித்துள்ளார். கட்டுமான பொருட்களின் வயது மற்றும் காலம் தொடர்பான ஆதாரங்களில் இந்துக்களின் தரப்பு முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய தொல்லியல் துறை சமர்ப்பித்து உள்ள அறிக்கையில் கற்களின் காலத்தையும் வயதையும் குறிப்பிடவில்லை எனவும் குற்றம் சாட்டினார்

மேலும் இந்திய தொல்லியல் துறையால் சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் உடைந்த சிலைகளின் பாகங்கள் குறித்த தகவல்களின் நம்பிக்கை தன்மையில் கேள்வி எழுப்பி இருக்கிறார் அஹ்லாக் அகமது. ஓ பள்ளிவாசலில் கண்டெடுக்கப்பட்டுள்ள சிலைகளின் பாகங்கள் பண்டைய காலத்தைச் சேர்ந்தவை இல்லை எனவும் குற்றம் சாட்டியிருக்கிறார். கடந்த வருடம் ஜூலை மாதம் 21ஆம் தேதி மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்கும்படி வாரணாசி நீதிமன்றம் இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அறிவியல் பூர்வமான தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு டிசம்பர் 18ஆம் தேதி தொல்லியல் துறை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

Tags :
Advertisement