GYANVAPI MASJID: பூஜைக்கு தடை விதிக்க முடியாது.! அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு.!
Gyanvapi மசூதி வழக்கில் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மசூதியை நிர்வகிக்கும் குழு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபடுவதற்கு உத்தரவு பிறப்பித்த வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி ஞானவாபி மசூதி கமிட்டி சார்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உத்திர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கு அந்த மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில் கோவிலின் அடித்தளத்தில் சிவலிங்கம் மற்றும் இந்து சிலைகள் இருப்பதற்கான ஆதாரங்களை வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தொல்லியல் துறை சமர்ப்பித்தது. இதனைத் தொடர்ந்து மசூதியின் அடித்தளத்தில் சிவலிங்கம் உள்ள இடத்தில் இந்துக்கள் பூஜை செய்யலாம் என மாவட்ட நீதிமன்றம் கடந்த ஜனவரி 31 2024 அன்று அனுமதி வழங்கியது.
இந்த உத்தரவிற்கு எதிராக ஞானவாபி மசூதியை நிர்வாகித்து வரும் கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அனுப்புமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கின் மீதான விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார். அவரது தீர்ப்பில் ஞானவாபி மசூதியில் இந்துக்கள் பூஜை செய்வதற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக குறிப்பிட்டுள்ளார் .