சட்டமன்றத்தில் குட்கா..!! உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும்..!! சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!!
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் முக.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்காவை எடுத்து வந்ததாக ஐகோர்ட்டிற்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உரிமை குழுவின் இந்த நோட்டீஸை இருமுறை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து அதிமுக சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி சி.குமரப்பன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு வழக்கை திரும்பப் பெறுவதாக தெரிவிக்க, இதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசுக்கு கடுமையான கேள்விகளை முன்வைத்து இருத்தனர். அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட யாருக்கும் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கவில்லை என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பிரமுகர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், சட்டப்பேரவைகள் குட்கா எடுத்து சென்றது தொடர்பான வழக்கில், உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸ் குறித்து சபாநாயகர் விசாரிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவும் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Read More : ஓபிஎஸ் தலையில் இடியை இறக்கிய மாஜி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்..!! அதிமுகவில் இணைய முடிவு..!!