முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இன்று குருபெயர்ச்சி!… இந்த ராசிகளுக்கு இனி குபேர யோகம்!

05:49 AM May 01, 2024 IST | Kokila
Advertisement

Gurupeyarchi: ஜோதிட பஞ்சாங்கத்தின்படி இன்று குரு பெயர்ச்சி நடக்கிறது. இதனால் மேஷம், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு குபேர ராஜயோகம் காத்திருக்கிறது.

Advertisement

நிகழும் குரோதி வருடம் சித்திரை மாதம் 18-ம் நாள், புதன்கிழமையான இன்று, (01.05.2024) கிருஷ்ண பட்சத்து, அஷ்டமி திதி, திரு வோண நட்சத்திரம், சுபம் நாமயோகம், பாலவம் நாமகரணத்தில், நேத்திரம் ஜுவனம் நிறைந்த சித்தயோக நன்னாளில் பிரகஸ்பதியாகிய குருபகவான் சர வீடான மேஷ ராசியிலிருந்து ஸ்திர வீடான ரிஷப ராசிக்குள் மதியம் 1 மணிக்கு பெயர்ச்சியாகிறார்.

பொன்னவன், மன்னவன், தென்னவன் என்றெல்லாம் புகழப் படும் குருபகவான் மட்டும் தான் நவகிரகங்களில் முழு சுபராக உள்ளவர். சுபத் தன்மையுடன் சுபராகி இருப்பதால் தான் குரு பார்த்திட கோடி புண்ணியம், குரு காண கோடி தோஷம் விலகும் என இவர் பார்வைக்கெல்லாம் ஜோதிட நூல்கள் பலன் சொல்லி இருக்கின்றன.

ஒன்பது கிரகங்களில் எட்டு கெட்டுப் போனாலும் ஒற்றைக் கொம்பன் போல் இவர் ஒருவர் நம் ஜாதகத்தில் வலுத்திருந்தால் அனைத்து யோகங்களும் வந்து சேரும். தனம், தான்யம், சம்பத்துடன் குளம், கோத்திரம் விளங்க விருத்தி அடைய சார் புத்திர பாக்கியத்தையும் தருபவர் இவர்தான். ராஜகிரகமாகி ராஜாவென அழைக்கப்படும் இவரின் தயவு இருந்தால் தான் அரசியலில் அமைச்சராக முடியும்.

காலப் பிரகாசிகை, கேரள துய்யம், பிருகத் ஜாதகம், நந்தி வாக்கியம், சார்க்கேயர் நாடி உள்ளிட்ட பல ஜோதிட நூல்கள் குருபகவானின் நிலையறிந்து பலன் சொல்க என்கிறது. கல்யாணம், காதுகுத்து, கிரகப்பிரவேசம் என எதற்கெடுத்தாலும் இவரின் பார்வை நம்மீது பட்டால் தான் நல்லன நடக்கும்.

கடந்த 20 ஆண்டுகளாகவே மேஷ ராசிக்காரர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர். பொருளாதார நிலை மோசமாக தான் இருந்திருக்கும், கழுத்தை நெறிக்கும் அளவுக்கு இருந்த கடன்களால் சிரமப்பட்டிருப்பார்கள். இத்தனை ஆண்டுகள் மிகுந்த மன உளைச்சலாகவே இருந்திருக்கும். ஆனால் இனி கவலை வேண்டாம். இந்த குரு பெயர்ச்சியால் அந்த நிலை எல்லாம் மாறப்போகிறது. உங்களின் பொருளாதார நிலையை குரு பகவான் மாற்றப்போகிறார். எல்லா கடன்களையும் அடைத்து விடுவீர்கள். சுப செலவுகள் அதிகரிக்கும்.

சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். அடுத்த 18 மாதங்கள் உங்கள் வாழ்க்கை உச்சத்தில் இருக்கப் போகிறது. ஆரோக்கியம், மகிழ்ச்சியான குடும்பம், திருமணம் என எல்லாம் கிடைக்கும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 6, 8 , 11-ம் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு குபேர யோகம் அடிக்கப்போகிறது. எனினும் வண்டி, வாகனம் ஓட்டும் போதும், பயணம் மேற்கொள்ளும் போதும் கவனம் தேவை. பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும். காதல் விஷயத்தில் யோசித்து செயல்படுவது நல்லது. ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு சென்று பூஜை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு 4,6,8ஆம் இடங்களில் வருவதால் வீடு வாங்கும் ராசி உள்ளது. நிலம் வாங்கும் ராசியும் இருக்கிறது. நீங்கள் சுப செலவு காரணமாக திருமண செலவுகள், வீடுகள், புதிய வாகனங்களை வாங்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் - உறவில் கவனம்: ஆனால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சமயங்களில்கே கிட்னி பிரச்சனைகள் ஏற்படலாம். அதேபோல் வயிற்று பிரச்சனைகள் கூட அதிகம் ஏற்படலாம். சுப செலவு இருக்கிறது என்பதால் பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம். முதலீடுகளில் அகலக்கால் வைக்க வேண்டாம்.

கடகம் ராசி: குரு பெயர்ச்சி உங்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். இத்தனை காலம் உங்களுக்கு வயிற்று பிரச்சனை, குடல் பிரச்சனை, கிட்னி பிரச்சனைகள் இருக்கலாம். இனிமேல் அப்படி பிரச்சனைகள் உங்களுக்கு வராது. ஆரோக்கியத்தில் இனி நல்ல காலம் பிறக்கும். லாபமாக கொட்டும்: உங்களுக்கு கஷ்டமாக இருந்த பொருளாதாரம் இனி சரியாகும். பணம் உங்களை தேடி வரும். பிஸினஸில் செய்யும் முதலீடுகள் லாபமாக மாறும் காலம் வந்துவிட்டது.

உங்களுக்கு அதே சமயம் மன நலனில் பிரச்சனை வரலாம். எவ்வளவு பணம் வந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம். தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம். கடன் வேண்டாம் - கெட்ட எண்ணம் வேண்டாம்: அதீத பணம் வருகிறது என்று நம்பி கடன் வாங்க வேண்டாம். கடன் பிரச்சனைகளில் மாட்டி சிக்க வேண்டாம்.

சிம்மம் ராசி: 10ல் குரு இருந்தால் பதவி போகும். அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உங்கள் வேலையில் நல்ல கவனத்துடன் இருக்கவும். இல்லையென்றால் வேலை போகும் ஆபத்தும் உள்ளது. நிலம், வீடு வாங்கும் போது ஆவணங்களை சரி பார்க்கவும். விவகாரம் உள்ள நிலங்களை வாங்க வேண்டாம்.

துலாம் ராசி: குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். போக்குவரத்தில் கவனமாக இருங்கள். விபத்து ஏற்படும் வாய்ப்புகள் கூட உள்ளதால் கவனமாக இருக்கவும். பங்காளிகள் உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். பண தேவை அதிகம் இருக்கும். கையில் காசு நிற்காது. பணம் செலவாகிக்கொண்டு இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் வாக்கு உங்களுக்கே எதிராக திரும்பலாம். நிலம் வாங்குவது, வீடு வாங்குவதில் கவனம் செலுத்தவும். தவறாக முடியலாம். வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம்.

மீனம் ராசி: உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். மன ஆரோக்கியம் சரியாகும். ஆனாலும் முன்பு மோசமாக இருந்த மன ஆரோக்கியம் காரணமாக.. ஏற்பட்ட உடல் பாதிப்புகள் தொடரும். அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். இரண்டாவது, மூன்றாவது குழந்தைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் குழந்தை பிறப்பில் சிக்கல்கள் ஏற்படலாம். அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். பதவிகள் காலியாகும் நிலை ஏற்படும்.

Readmore: தமிழகமே…! அனைத்து கல்லூரியில் CCTV கட்டாயம் பொருத்த வேண்டும்…! அரசு உத்தரவு

Advertisement
Next Article