முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

2024 குரு பெயர்ச்சி: அதிர்ஷ்டம் அடிக்க போகும் 2 ராசிகள்.!

05:55 AM Dec 09, 2023 IST | 1newsnationuser4
Advertisement

புதிய வருடமான 2024 இன்னும் 23 நாட்களில் பிறக்கப் போகிறது. இந்த புது வருடத்தில் நமது ராசிக்கான பலன் என்னவாக இருக்கும் என்பது ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். புது வருடம் பிறந்த சித்திரை மாதத்தில் குரு பகவானின் இடப்பெயர்ச்சி மட்டுமே நிகழ இருக்கிறது. இது தனுசு மற்றும் மகர ராசி கொண்டவர்களுக்கு எந்த மாதிரியான மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் தரப்போகிறது என காண்போம்.

Advertisement

தனுசு ராசிக்காரர்களுக்கு சித்திரை மாதம் முதல் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்யும் குரு பகவான் மே மாதம் ஆறாவது வீட்டில் அடி எடுத்து வைத்திருக்கிறார். குரு பகவான் ஆறாவது வீட்டில் வந்தால் அசுப பலன்கள் குறையும் என்பது விதி. எனவே தனுசு ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும் அமையும். குரு பனிரெண்டாம் பாவத்தில் பயணம் செய்யும்போது தேவைக்கேற்ற பணம் வந்தாலும் பணம் தாங்காது. சொத்து மற்றும் வீடு மனை வாங்கும் பாக்கியம் அமையும் வருமானம் நல்ல விஷயத்திற்கு செலவாகும். தனுசு ராசிக்காரர்கள் சுற்றுலா இடமிருந்து விலகி இருப்பது நன்மை பயக்கும்.

மகர ராசிக்காரர்களுக்கு கடந்த ஐந்து வருடங்களாக குருவின் பார்வை படாமல் இருக்கிறது. இதனால் அதிர்ஷ்டம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தவர்களுக்கு வர இருக்கின்ற வருடத்தில் பல சிறப்பான அதிர்ஷ்டங்கள் காத்திருக்கின்றன. குருவின் பார்வை ஒன்பதாவது இடத்தில் பட்டால் மகர ராசி நேயர்களுக்கு அதிர்ஷ்டம் தான். திருமணத் தடை நீங்கும். ஜாதகத்தால் திருமண தடைபட்டவர்களுக்கும் நல்ல விஷயம் நடக்கும். திருமணமாகியும் புத்திர பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் குருவின் பார்வை பதினோராவது இடத்தில் படும்போது புத்திர பாக்கியம் உண்டாகும் வாய்ப்பும் இருக்கிறது. பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது. இதுவரை வாடகை வீட்டில் இருந்தவர்களுக்கு சொந்த வீடு வாங்கும் பாக்கியம் கூடிவரும்.

Tags :
2024 Predictionastrologylife styleNew yearzodiac signs
Advertisement
Next Article