குல்மார்க் தீவிரவாத தாக்குதல் : மேலும் ஒரு ராணுவ வீரர் வீரமரணம்.. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!!
காஷ்மீரின் கந்தர்பல் மாவட்டத்தில் உள்ள சோனாமார்க் சுற்றுலா விடுதிக்கு அருகே ககாங்கிர் என்ற இடத்தில், இந்த வார தொடக்கத்தில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் உள்ளூர் மருத்துவர் உட்பட சுரங்கப்பாதை கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த ஏழு தொழிலாளர்கள் கொல்லட்டப்பட்டனர். இதனையடுத்து, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் உள்ள போடாபதேர் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். குல்மார்க்கிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதி, ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்பகுதியில் பொதுமக்கள் நடமாடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள், ராணுவப் பொருள்களை எடுத்துச் செல்லும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் (ஆர்மி போர்ட்டர்) என 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த மற்றொரு ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
Read more ; மாநாட்டுக்கு “வெற்றிக் கொள்கை திருவிழா” என பெயர் சூட்டிய விஜய்..!! இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..?