IPL 2024 GT vs DC : குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங்!
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.
17வது ஐபிஎல் தொடரின் 32வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களது புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி அதில், மூன்று போட்டிகளில் வெற்றியும் மூன்று போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.
அதேபோல் பெரும் விபத்தில் இருந்து மீண்டு வந்த ரிஷப் பண்ட் நடப்பு சீசனில் விளையாடுவது மட்டும் இல்லாமல் அணியை வழிநடத்தி வருகின்றார். இவரது தலைமையில் டெல்லி அணி 6 போட்டிகளில் விளையாடி, இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றும் நான்கு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தும் உள்ளது. இதனால் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் இன்று மோதிக்கொள்கின்றது.