For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உடலுறவின் போது அதிக இரத்த கசிவு.. பரிதாபமாக உயிரிழந்த நர்சிங் மாணவி..!! - இணையத்தில் சிகிச்சை தேடிய காதலன் கைது..!!

Gujarat girl bleeds to death after intercourse while boy spends hours searching remedies online
03:49 PM Oct 01, 2024 IST | Mari Thangam
உடலுறவின் போது அதிக இரத்த கசிவு   பரிதாபமாக உயிரிழந்த நர்சிங் மாணவி       இணையத்தில் சிகிச்சை தேடிய காதலன் கைது
Advertisement

குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தில் நர்சிங் மாணவி உயிரிழந்த வழக்கில் 26 வயது இளைஞனை போலீசார் கைது செய்தனர். மாணவியுடன் உடல்உறவில் இருந்த போது அதிக ரத்தம் கசிந்ததாகவும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் காலம் தாழ்த்தியதால் அந்த பெண் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

26 வயது இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் உடலுறவு கொண்டுள்ளனர். இதன் போது சிறுமியின் அந்தரங்க பகுதியில் ஆழமான காயம் ஏற்பட்டது. இதனால் அதிக இரத்த கசிவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, இரத்தப்போக்கை நிறுத்துவது எப்படி என்று அந்த இளைஞர்  இணையத்தில் தேடியுள்ளான். பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் இருந்து இரத்தம் வழிந்த போதிலும், அந்த நபர் மீண்டும் உடலுறவு கொள்ள முயற்சித்துள்ளான். இதனால் அந்த பெண் உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து நவ்சாரி எஸ்பி சுஷில் அகர்வால் கூறும்போது, ​​"பெண்ணிற்கு இரத்த கசிவு ஏற்பட்டபோது 108க்கு அழைக்கவோ அல்லது மருத்துவ உதவியை நாடவோ பதிலாக, அவர் தனது நண்பர்களைத் தொடர்பு கொண்டார். நண்பர் யாரும் உதவிக்கு வராததால், பல மணி நேரங்களுக்கு பிறகு மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றார். ஹோட்டலை விட்டு வெளியேறும் முன், ஆதாரங்களை அழிக்க ரத்தக் கறைகளை சுத்தம் செய்துள்ளார். அந்த நபர் மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

பெண்ணின் பிறப்புறுப்பில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண், நவ்சாரியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு நர்சிங் படிப்பு படித்து வந்தார். உயிரிழந்த பெண்ணும், கைது செய்யப்பட்ட இளைஞனும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.  உள்ளூர் நீதிமன்றம் குற்றவாளியை அக்டோபர் 4 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது.

Read more ; மழைக்காலம் தொடங்கியாச்சு.. கொசு கடியை தவிர்க்க க்ரீம் பயன்படுத்துறீங்களா? உயிருக்கே ஆபத்து..

Tags :
Advertisement