For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக வயதான நபர்!. 116 வயதான ஜப்பானிய மூதாட்டி காலமானார்!.

Guinness World Record Oldest Person! 116-year-old Japanese woman dies!
06:23 AM Jan 05, 2025 IST | Kokila
கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக வயதான நபர்   116 வயதான ஜப்பானிய மூதாட்டி காலமானார்
Advertisement

World's oldest person: உலகின் மிக வயதான நபரான 116 வயதான ஜப்பானை சேர்ந்த மூதாட்டி டொமிகோ இடூகா வயது மூப்பு மற்றும் உடலநலக் குறைவால் டிசம்பர் 29 அன்று காலமானார்.

Advertisement

கின்னஸ் உலக சாதனையின் படி, ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரான்யாஸ் மொரேரா (117). இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, உலகின் மிக வயதான நபராக டூமிகோ இடூகா அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக டூமிகோ இடூகா தற்போது உயிரிழந்துள்ளார் என ஜப்பானின் தெற்கு நகர மேயர் ரியோசுகே தகஷிமா தெரிவித்தார்.

இதுதொடர்பாக ரியோசுகே வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜப்பானின் வர்த்தக மையமான ஒசாகா அருகிலுள்ள அஷியாவில் இடூகா வசித்து வந்தார். அவருக்கு 4 வாரிசுகள் மற்றும் 5 பேரக் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2019 முதல் நர்சிங் ஹோமில் தங்கி இருந்த அவர், கடந்த மாதம் 29-ம் தேதி மரணமடைந்தார். 1908, மே 23-ல் பிறந்த டூமிகோ இடூகா, 20 வயதில் திருமணம் செய்து கொண்டார், மேலும் கின்னஸ் படி, அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் இருந்தனர்.

உலகப் போர்கள், தொற்றுநோய்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்ட காலத்தில் இடூகா வாழ்ந்தார். இரண்டாம் உலகப் போரின்போது தனது கணவரின் ஜவுளித் தொழிற்சாலையின் அலுவலகத்தை இடூகா நிர்வகித்தார். அவர் 1979 இல் கணவர் இறந்த பிறகு நாராவில் தனியாக வசித்து வந்தார். அதற்கு நாங்கள் அவருக்கு நன்றி கூறுகிறோம். தனது வயதான காலத்தில் வாழைப்பழங்கள், பால் போன்ற குளிர்பானமான கால்பிஸை ரசித்து குடித்து நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடூகாவுக்குப் பிறகு உலகின் மிக வயதான நபர் யார்? ஜெரண்டாலஜி ஆராய்ச்சி குழுவின் கூற்றுப்படி, உலகின் மிக வயதான நபர் இப்போது 116 வயதான பிரேசிலிய கன்னியாஸ்திரி இனா கானபரோ லூகாஸ் ஆவார், அவர் இடூகாவுக்கு 16 நாட்களுக்குப் பிறகு பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: நாம் சாப்பிட்ட எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரத்தில் ஜீரணமாகும் தெரியுமா?. உடலில் என்னலாம் நடக்கும்?

Tags :
Advertisement