வெளியான ரூல்ஸ்...! திரைப்படத்தில் இனி இதுவும் கட்டாயம்...! மத்திய அரசு அதிரடி உத்தரவு...!
பார்வை மற்றும் கேட்புத்திறன் குறைபாடு உடையவர்கள் திரைப்படங்களை அணுகுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; திரையரங்குகள் போன்ற பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகளையும் உட்படுத்தும் வகையில், திரைப்படங்களை அணுகுவதற்கான விதிமுறைகளை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், 2024, மார்ச் 15 தேதியிட்ட அலுவலக ஆணையில் வெளியிட்டது. இந்த ஆணை, திரையரங்குகளில் திரைப்படங்களுக்கு செல்கின்ற பார்வை மற்றும் கேட்புத்திறன் குறைபாடு உடையவர்களுக்கான அணுகல் விதிமுறைகளைக் கொண்டது.
மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தால், சான்றளிக்கப்பட்டு, திரையரங்குகளில் வணிக ரீதியாக பொதுமக்களுக்கு திரையிடப்படும் கதைப்படங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தும். பார்வை மற்றும் கேட்புத்திறன் குறைபாடு உடையவர்களுக்கு சைகை மொழிக் குறியீடு/ துணைத்தலைப்புகள், ஒலி வடிவில் விளக்கம் என்பதில் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு அம்சம் கிடைக்கின்ற வகையில், அனைத்து திரைப்படங்களுக்கும் சான்றளிக்கப்பட வேண்டும்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அமலாக்க 2024, செப்டம்பர் 15-ம் தேதியை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நிர்ணயித்து இருந்தது. இ-சினிபிரமாணில் குறிப்பிடப்பட்ட அணுகல் விதிமுறைகள் வெற்றிகரமாக இந்தத் தேதியில் அமலுக்கு வந்திருப்பதை மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது. இந்த விதிமுறைகளின்படி, தேவையான அணுகல் அம்சங்களுடன் தங்கள் திரைப்படங்கள் இருப்பதற்கு விண்ணப்பத்தாரர்கள் இப்போது விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.