தரைப்படை தாக்குதல்!. லெபனானுக்குள் நுழைந்தது இஸ்ரேலிய இராணுவம்!. அதிகரிக்கும் பதற்றம்!
Isreal Attack: தரைவழி தாக்குதலை நடத்தும் வகையில் இஸ்ரேல் ராணுவம் லெபனானுக்குள் நுழைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் லெபனானின் ஹெஸ்பொல்லா குழுவின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்டார். இதனால், மேலும் தாக்குதல் நடவடிக்கைகள் மத்திய கிழக்கு முழுவதும் பரவக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பியது. இஸ்ரேல் தொடர்ந்து பெய்ரூட்டைத் தாக்கி, ஏமன் மற்றும் சிரியா மீது தாக்குதல்களை நடத்திவருகிறது.
இந்தநிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு, லெபனானில் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதன்மூலம் தரைவழி தாக்குதலை நடத்தும் வகையில் இஸ்ரேல் ராணுவம் லெபனானுக்குள் நுழைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் ராணுவம், நேற்று இரவு லெபனானுக்கு நுழைந்தது. வடக்கு எல்லைக்கு அருகில் அமைந்துள்ள லெபனான் கிராமங்கள் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் அவர்களைப் பயன்படுத்தி வடக்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் கூறியுள்ளது. லெபனானில் தொடங்கப்பட்ட தரைப்படை நடவடிக்கைகள் துல்லியமான புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன. இந்த தாக்குதலால் எல்லைக்கு அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் வடக்கில் உள்ள இஸ்ரேலிய சமூகங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
Readmore: Google Chrome பயனர்களே ஆபத்து!. பாதுகாப்பாக இருப்பது எப்படி?