பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை..!! ஓகே சொன்ன கீர்த்தி சுரேஷ்..!! கோவாவில் டும் டும் டும்..!! ரசிகர்கள் வாழ்த்து..!!
மலையாள நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் குமார் ஆகியோரின் மகளான நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடித்து வரும் இவர், பாலிவுட் சினிமா ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் உறவுக்காரர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தனது பெற்றோர் பார்த்திருக்கும் உறவுக்கார பையனை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம். இவரது திருமணம் கோவாவில் நடைபெற இருக்கிறது. முன்னதாக, பெற்றோர் பார்த்திருக்கும் மாப்பிள்ளையை மணம் முடிக்க கீர்த்தி சுரேஷ் சம்மதம் தெரிவித்த நிலையில், அவரது திருமணம் குறித்து முடிவு செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கீர்த்தியின் திருமணம் பற்றி அவரது குடும்பத்தாரின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பலருக்கும் காத்திருக்கின்றனர்.
திருமண வதந்திகள்
கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த தகவல் வெளியாவது இது முதல் முறையல்லை. ஏற்கனவே, கேரளாவை சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவரை திருமணம் செய்து கொள்ளபோவதாக வதந்திகள் பரவின. பின்னர் பிரபல இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர் - கீர்த்தி சுரேஷ் ஆகியோர் மணமுடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்தன. அப்போது கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் இதற்கு மறுப்பு தெரிவித்தனர்.