முதலிரவில், மணமகள் கேட்ட காரியம்; அலறியடித்து ஓடி, விவாகரத்து கேட்ட மணமகன்..
உத்திரபிரதேசம் மாநிலத்தில், பெற்றோர் ஏற்பாட்டின் படி சமீபத்தில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இரு வீட்டாரின் சம்மதத்துடனும் இவர்களின் திருமணம் மகிழ்ச்சியாக நடைபெற்றுள்ளது. இதையடுத்து, இந்த தம்பதிக்கான முதலிரவு ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. பல ஆசைகளுடன் முதலிரவு அறைக்குள் மணமகன் சென்றுள்ளார். அப்போது மணமக்கள் இருவரும் மனம் விட்டு பேசியுள்ளனர்.
அப்போது தனது கணவன் தானே என்ற உரிமையில் மணமகள் மணமகனிடம் கேட்ட காரியத்தால் மணமகன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். ஆம், மணமகள் தனது கணவரிடம் பீர், கஞ்சா மற்றும் மட்டன் இறைச்சி ஆகியவை வேண்டும் என்று கேட்டுள்ளார். முதலிரவுக்கு ஆசையாக சென்ற மணமகனின் ஆசைகள் அனைத்தும் சுக்குநூறாக உடைக்கப்பட்டது. பின்னர் மணமகளை பற்றி விசாரிக்கும் போது தான், அவருக்கு திருமணத்திற்கு முன்பே பீர் மற்றும் கஞ்சா குடிக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன், தன் குடும்பத்தினருடன் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில் மணமகன் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார். அந்த வகையில், திருமணமான முதலிரவிலேயே மணமகள் செய்த காரியத்தால் மணமகன் விவாகரத்து வரை சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Read more: “அப்பா, அந்த அங்கிள் என்ன இங்க தொட்டாரு” கதறிய சிறுமி; பாசமாக பேசிய வாலிபர் செய்த காரியம்..