For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அமோனியா கசிவு வழக்கு: கோரமண்டல் ஆலைக்கு பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு..! 

12:45 PM May 21, 2024 IST | Mari Thangam
அமோனியா கசிவு வழக்கு  கோரமண்டல் ஆலைக்கு பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு    
Advertisement

சென்னை எண்ணூர் கோரமண்டல் ஆலை மீண்டும் இயங்க தமிழ்நாடு அரசின் அனுமதி அவசியம் என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்த இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் எனவும் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

சென்னை எண்ணூர் பெரியகுப்பம் அருகே விரைவு சாலையில்  கோரமண்டல் உர ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு தேவையான ரசாயனங்கள் வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் கடலுக்கும் கோரமண்டல் தொழிற்சாலைக்கும் இடையேயான குழாய் வழியாக கடல் பகுதியில் அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டது.   இதனால் பெரியகுப்பம்,  சின்ன குப்பம்,  தாளங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல்,  கண்ணெரிச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன.

தொடர்ந்து,  அப்பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மக்களுக்கு கண் எரிச்சல்,  மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இதனையடுத்து இந்த பகுதிகளில் சென்னை மாநகராட்சியின் சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு மருத்துவர்கள் மூலம் மருந்துகள் வழங்கப்பட்டது.  இந்நிலையில் தமிழ்நாடு அரசு கோரமண்டல் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், எண்ணூர் கோரமண்டல் ஆலையில் அமோனியா வாயு கசிவு வழக்கு தொடர்பாக தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில், “சென்னை எண்ணூர் கோரமண்டல் ஆலை மீண்டும் இயங்க தமிழ்நாடு அரசின் அனுமதி அவசியம்; மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்த இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், “சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து என்.ஓ.சி சான்றிதழ் பெற்ற பிறகு ஆலையை மீண்டும் இயக்கிக் கொள்ளலாம். ஆலையை மீண்டும் இயக்க தமிழ்நாடு அரசின் அனுமதி அவசியம் என தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளை முழுமையான கடைப்பிடிக்க வேண்டும். மாசு கட்டுப்பாடு வாரியம் பரிந்துரைத்த இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்” என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

நான்-ஸ்டிக் குக்வேர்களில் உணவு சமைப்பது சரியா? ICMR எச்சரிக்கை..!

Tags :
Advertisement