பொன்முடிக்கு Green Signal..!! மீண்டும் எம்.எல்.ஏ. பதவி..!! சட்டப்பேரவை செயலகம் முக்கிய அறிவிப்பு..!!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வழக்கில் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இதற்கு எதிராக முன்னாள் அமைச்சர் பொன்முடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. பதவி கேட்டு அணுகலாம் என்று சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. மேலும், நீதிமன்றத்தை நாடியும் பொன்முடி எம்.எல்.ஏ. பதவியை பெறலாம் என தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கிடையே, சட்டப்பேரவை செயலகத்தை அணுகாமலேயே பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆகலாம் என திமுக எம்பி வில்சன் தெரிவித்துள்ளார்.
Read More : Aadhaar | மாணவர்களே இனி நீங்கள் ஈசியா ஆதார் கார்டு பெறலாம்..!! பள்ளிக்கல்வித்துறை சொன்ன குட் நியூஸ்..!!