For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குட் நியூஸ்..! 100 நபர்களுக்கு பசுமை விருது... ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு...!

06:10 AM Jan 25, 2024 IST | 1newsnationuser2
குட் நியூஸ்    100 நபர்களுக்கு பசுமை விருது    ரூ 1 லட்சம் ஊக்கத்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு
Advertisement

தமிழக அரசு வழங்கும் பசுமை முதன்மையாளர் விருது பெறுவதற்கு வரவேற்கப்படுகின்றன.

Advertisement

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள், அமைப்புகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ.1,00,000/- வீதம் பண முடிப்பும் வழங்க உள்ளது.

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு, சூழலியல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த நடவடிக்கை மற்றும் கடற்கரைசார் பகுதிகள் பாதுகாப்பு நடவடிக்கை ஆகிய தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள் அல்லது தொழிற்சாலைகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை முதன்மையாளர் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனிநபர்கள், நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பசுமை முதன்மையாளர் விருதுக்கு விண்ணப்பிக்க 2024 ஏப்ரல் 15-ம் நாள் கடைசி நாள் ஆகும்.

Tags :
Advertisement