பெரும் சோகம்..!! பழம்பெரும் நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்..!! திரையுலகினர் இரங்கல்..!!
தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர் விஜய ரங்கராஜூ காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், திங்கள்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கேரக்டர் ஆர்ட்டிஸ்ட், வில்லன், ஃபைட் மாஸ்டர் என பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் காயமடைந்த அவர், சிகிச்சைக்காக சென்னை சென்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
1994ஆம் ஆண்டு நந்தமுரி பாலகிருஷ்ணா பைரவா தீவு திரைப்படத்தில் நடித்தார். தெலுங்கில் நடிகராக அங்கீகாரம் பெற்ற இவர், அதிகமாக வில்லன் வேடங்களில் நடித்துள்ளார். இதுவரை சுமார் 5000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். புனேவில் பிறந்த இவர் மும்பையில் வளர்ந்தார். கடந்த காலங்களில் பல நேர்காணல்களில் காவல்துறை அதிகாரியாக விரும்புவதாக கூறியுள்ளர்.
பாபு இயக்கிய 'சீதா கல்யாணம்' படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். இது அவருக்கு முதல் படம். ஆனால், பைரவ தீவு படம்தான் அவருக்கு அங்கீகாரம் கொடுத்தது. இதனால் அவர் பைரவ தீபம் விஜய் என்று அழைக்கப்பட்டார். பிறகு அவருக்கு சினிமா துறையில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன.