For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

RIP: பெரும் சோகம்!… முன்னாள் முதலமைச்சர் காலமானார்!… அரசியல் தலைவர்கள் இரங்கல்!

09:05 AM Feb 23, 2024 IST | 1newsnationuser3
rip  பெரும் சோகம் … முன்னாள் முதலமைச்சர் காலமானார் … அரசியல் தலைவர்கள் இரங்கல்
Advertisement

RIP: மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சரும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் ஜோஷி (Manohar Joshi) மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86.

Advertisement

மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி நெஞ்சு வலி காரணமாக புதன்கிழமை மும்பையில் உள்ள பிடி ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரு நாள்களாக அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில் இன்று (23 பிப்ரவரி 2024) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 86 ஆகும். மனோகர் ஜோஷியின் இறுதி சடங்கு இன்று மாலை மும்பையில் உள்ள சிவாஜி பார்க் மயானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள ராய்கட் மாவட்டத்தில் நந்த்வி 1937ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி பிறந்தார். மும்பையில் கல்வி பயின்றார். ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கியவர் மனோகர் ஜோஷி என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி அனஹா மனோகர் ஜோஷி 2020ஆம் ஆண்டு தனது 75ஆவது வயதில் உயிரிழந்தார். இவருக்கு ஒரு மகன், மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். 1967ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். சிவ சேனா கட்சியில் 40 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றினார்.

1968-70 காலகட்டத்தில் மும்பை மாநகராட்சி கவுன்சிலராக பணியாற்றினார். 1976-77 காலகட்டத்தில் மும்பையின் மேயராகவும் பணியாற்றியுள்ளார். மகாராஷ்டிர மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் மூன்று முறை அந்த பதவியில் இருந்தார், பின்னர் 1990ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினரானார். 1990-91 காலகட்டத்தில் மகாராஷ்டிர சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக செயலாற்றினார்.

சிவசேனா கட்சி பிளவுபடுவதற்கு முன்னர் அக்கட்சியிலிருந்து முதலமைச்சராக முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மனோகர் ஜோஷி. 1995 முதல் 1999 வரை அவர் முதல்வராக பதவி வகித்தார். 1999 மக்களவைத் தேர்தலில் மும்பை வடக்கு மத்திய மக்களவைத் தொகுதியில் சிவசேனா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2002 முதல் 2004 வரை பாஜக ஆட்சிக்காலத்தில் மக்களவையில் சபாநாயகராக பணியாற்றினார்.

English summary: RIP: Former Maharashtra Chief Minister and senior Shiv Sena leader Manohar Joshi passed away today due to a heart attack.

Readmore:‘இந்த நன்றி கெட்டவர்களுக்கா உணவளிக்கிறீர்கள்’..? ’இனியும் வேண்டாம்’..!! Modi அரசை தாக்கிய நடிகர் கிஷோர்..!!

Tags :
Advertisement