பெரும் சோகம்..!! விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!! 6 பேர் உயிரிழப்பு..!! பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு..?
கோட்டூர் பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் கோட்டூர் அடுத்துள்ள அப்பைநாயக்கன்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பட்டாசு ஆலையில் 30-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை எடை பார்க்கும்போது, மூலப்பொருட்களில் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடித்துள்ளது.
இதில், 4 கெமிக்கல் அறைகள் முழுவதுமாக சிதறியது. இடிபாடுகளில் சிக்கி தற்போது வரை 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் தீயணைத்துறையும், காவல்துறையும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகரில் தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்து சம்பவங்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்கதையாகி வரும் நிலையில், தற்போது 6 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.